சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நண்பேன்டா.. அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன் கோரிக்கை!

தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

லோக் சபா தேர்தலில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது. லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக இடையே கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. ஆனாலும் அவ்வப்போதும் அதிமுகவை சேர்ந்த சிலர் பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

AIADMK and BJP members should treat each other friendly says Nirmala Seetharaman

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரண்டு கட்சிக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்ல கூடாது.

எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். அவர்தான் இத்தனை ஆண்டுகளாக எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றி வைத்துக் கொண்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு குறைவின்றி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்துகிறது. திருச்சி மற்றும் ஆவடியில் உள்ள பொதுத்துறை, பாதுகாப்பு துறை நிறுவனங்களை மூடும் திட்டம் இல்லை. தமிழகத்திற்கு பாஜக நிறைய நலத்திட்டங்கள் கொண்டு வருகிறது, என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

English summary
AIADMK and BJP members should treat each other friendly says Union Minister Nirmala Seetharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X