கூட்டி கழிச்சு பாருங்க.. சரியா வரும்! ஓபிஎஸ்ஸிடம் கொடுக்கப்பட்ட கணக்கு வழக்கு "ரிப்போர்ட்".. பின்னணி
சென்னை: நாளை அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில், கட்சியின் வரவு செலவு அறிக்கை ஓபிஎஸ்சிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி அதிமுகவின் வரவ்வு செலவு அறிக்கை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்-தான் கணக்கு வழக்கு விவரத்தை வாசித்துக் காட்ட வேண்டும் என்பதால் கணக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்த வரவு செலவு அறிக்கையில், கடந்த பொதுக்குழு கூட்டம் முதல் இந்தக் கூட்டம் வரை என்னென்ன செலவுகள் செய்யப்பட்டுள்ளன என்பது இடம்பெற்றிருக்கும். ஒருவேளை நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என்றால், அவர் வரவில்லை என்று வருகை பதிவேட்டில் பதிவிடப்பட்டு, தலைமைக் கழக நிர்வாகிகள் யாராவது வாசிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கொடுங்க.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஓபிஎஸ் ஏமாற்றம்