Just In
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர் பெண்கள்.
மக்களால் நான்... மக்களுக்கான நான் - ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள சிறப்பம்சங்கள்

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை புதன்கிழமையன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சென்னை ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து நமது மூத்த அரசியல் செய்தியாளர் அர்ஷத் கான் பதிவு செய்த வீடியோ காட்சிகள்:
ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் சாரை சாரையாக குவிந்து வணங்கினர். அதிமுக பெண் தொண்டர்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீர் சிந்தி கதறி அழுத காட்சிகள் நெஞ்சை பிழிவதாக இருந்தன.