• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அதிமுக தொண்டர்கள் வாக்களித்து முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்போம்- இப்படியும் வேண்டுகோள்!

|

சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக தொண்டர்களே வாக்களித்து தீர்மானித்தால் என்ன? அப்படி செய்தால் அதிருப்திக்கான வாய்ப்பு குறையும் அல்லவா? என்ற ஒரு யோசனையையும் அதிமுக தொண்டர்கள் முன்வைத்து வருகின்றன.

வேடசந்தூர் சட்டசபை தொகுதியை சேர்ந்த Shakthi (Sathiya Moorthy) என்ற அதிமுக தொண்டர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:

AIADMK cadres want to select party CM Candidate

அக்டோபர் - 7 ஒட்டு மொத்த இந்திய அரசியலும் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக புரட்சி தலைவி , தங்க தாரகை அம்மா அவர்களால் நிலை உயர்த்தப்பட்ட அஇஅதிமுக இயக்கத்தின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்க போகிறார்கள் ........

சாமானிய தொண்டன் கூட முதல்வராகலாம் என்ற நிலை உள்ளதால் யாரை அறிவிப்பார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு புரியாத புதிராக உள்ளது

.....

தற்போது வரை அவர் விருப்பத்திற்கேற்ப அம்மாவின் அரசியல் வாரிசு ஐயா OPS வேண்டும் எனவும் , அம்மாவின் ஆசி பெற்று திறம்பட மக்கள் பணியாற்றி மக்களின் முதல்வராக நான்கு ஆண்டுகள் கடந்து சிறப்பாக ஆட்சி செய்யும் ஐயா எடப்பாடியார் அவர்களை தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் சகட்டு மேனிக்கு பதிவுகளை பதிவிட்டுக்கொண்டிருக்கின்றனர் ....

11 பேர் கொண்ட குழு அமைத்து அதன் மூலம் தீர்வு கண்டால் 11 பேரில் இத்தனை பேர் OPS ஆதரவாளர்கள் இத்தனை பேர் EPS ஆதரவாளர்கள் என்று கூறி பிரச்சனைகள் தான் அதிகம் வரும் ......

கட்சியின் விதிப்படி அஇஅதிமுக உறுப்பினர்களே வாக்களித்து தேர்ந்தெடுத்தால் பிரச்சனை வராது குறிப்பாக தேனி சேலம் மாவட்டங்களில் பலத்த கட்டுபாடுடன் வாக்களிக்க தலைமை உத்தரவிட்டால் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியது மாதிரியும் ஆயிற்று தொண்டர்கள் விரும்பும் தலைமை அமைந்த மாதிரியும் ஆகும் .....

AIADMK cadres want to select party CM Candidate

இதன் மூலம் தொண்டர்களும் புத்துணர்ச்சி பெறுவர் ..... அம்மா வின் ஆசியுடன் தான் கழகம் இன்றளவும் இருக்கிறது ....

முட்டாள் தனமாக அவரால் முதல்வராக்கப்பட்டார் இவர் இவரால் முதல்வராக்கப்பட்டார் என்று கூறி தம்மை தாமே இழிவு செய்வதை காட்டிலும் அமைதியாகவோ அல்லது தலைமை எடுக்கும் முடிவிற்கு கட்டுபட்டோ இருந்தால் தான் 2021 ல் ஆட்சி அமைக்க முடியும் ..........

அஇஅதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை அழிக்க ஒருவனும் இல்லை நம்மை நாமே அழித்துக்கொண்டால் தான் உண்டு ....

கழகமே கோவில் அம்மாவே தெய்வம் என்று வாழும் அஇஅதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி என்ற இலக்கை அடைய முடியும் .......

நடுநிலையோடு உள்ள பல அஇஅதிமுக தொண்டர்கள் கோஸ்டி பூசலால் மனம் வருந்தி கொண்டு தான் உள்ளனர் ..... நாம் விசுவாசத்தை காட்டுகிறோம் என்று நினைத்து கழகத்தை அழிவு பாதையில் தான் அழைத்து செல்கின்றனர் இருதரப்பு சமூக வளைதள நண்பர்கள் .......

அதிமுக முதல்வர் வேட்பாளர்- பொதுக்குழுவில் பெரும்பான்மையை நிரூபிக்கிறேன்.. கோதாவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பர் அது போல தான் நாம் கூடி ஒற்றுமையாக இருந்தால் தான் கோடிகளில் உள்ள வாக்குகளை கழகம் என்னும் கோவிலுக்கு பெற்று தர முடியும் இல்லையென்றால் தெருகோடி தான் மிஞ்சும் என்பதை நினைவில் கொண்டு கள பனியாற்றுங்கள் ..............

நடுநிலையோடு மக்கள் , விவசாயிகள் மாணவர்கள் இளைஞர்கள் காவலர்கள் மருத்துவர்கள் கூலிதொழிலாளர்கள் இவர்களை நினைத்து பார்த்தால் குறிப்பிட்ட ஒருவருக்கு தான் சப்போர்ட் செய்யமுடியும் மக்களும் என்று கொண்டவராக தான் அவரும் இருக்கிறார் ........

தொண்டர்கள் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் அஇஅதிமுக தொண்டர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பதே சரி

OPS ஆதரவாளரும் கழக தொண்டர் தான்

EPS ஆதரவாளரும் தொண்டர் தான்

இவர்கள் இருவரில் யார் விருப்பத்தை கழகம் நிறைவேற்றும் .......

ஒரு தரப்பினர் தாங்கள் விரும்பியவர் வரவில்லை என்றால் தொண்டரின் விருப்பம் நிறைவேறியது என்று எப்படி கூற முடியும் ...

வாக்களித்து தேர்ந்தெடுத்தால் ஒட்டு மொத்த #தமிழகம் , கேரளா கர்நாடகா , புதுச்சேரி பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்று நினைத்து ஆறுதல் பட வாய்ப்பிருக்கிறது ......... இப்படித்தான் அந்த தொண்டர் பதிவு செய்திருக்கிறார்.

இதுவும் நல்ல யோசனையே!

 
 
 
English summary
AIADMK cadres want to select the party CM Candidate for the Assembly Elections 2021.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X