• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதிரடி அதிமுக.. மொத்தம் "171".. இதுதான் பட்டியல்.. இங்குதான் இரட்டை இலை போட்டியிட போகுது!

|

சென்னை: வரப்போகும் தேர்தலை மையமாக வைத்து, அதிமுக கூட்டணியின் ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.. இதையடுத்து, அரசியல் களத்தின் பரப்பின் அடுத்த கட்ட லெவலுக்கு அதிமுக சென்றுள்ளது..!

இந்த முறை சட்டசபை தேர்தல் அதிமுக, திமுக மட்டுமல்ல, பாஜகவுக்கும் மிக முக்கியமான தேர்தல்.. வட மாநிலங்களை வளைத்து கைக்குள் வைத்திருக்கும் பாஜகவுக்கு, தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் குட்டிக்கரணம் அடித்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் உள்ளது அக்கட்சிக்கு பெரும் அதிருப்தியை உண்டாக்க வருகிறது.

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை முன்னெடுப்போம் என்பதுதான் பாஜகவின் அடிநாத முழக்கமாக உள்ளது.. அந்த வகையில், தமிழகத்திலும் முயற்சிக்கிறது.. ஆனால், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் வேறு கட்சிகளை கனவிலும் நினைத்து பார்க்க தயாரில்லை என்பதையும், திராவிட கட்சிகள் ஆதரவின்றி நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்ற யதார்த்தத்தையும் பாஜக தற்போதுதான் உணர்ந்துள்ளது.

 மெஜாரிட்டி

மெஜாரிட்டி

அதற்காகவே, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க போகிறது.. அதேசமயம், இதே அதிமுகவும் அளவுக்கு அதிகமாக, தங்களைவிட வளர்ந்து விடக்கூடாது, மெஜாரிட்டி கிடைத்துவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளது.. எல்லாவற்றிற்கும் மேலாக, திமுக தலைதூக்கிவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளது.. இது சட்டசபை தேர்தல் என்றாலும், பாஜகவின் குறி வரப்போகும் எம்பி தேர்தல்தான்.

 குடைச்சல்

குடைச்சல்

அந்த தேர்தலிலும் திமுக தலைதூக்கி தேசிய அளவில் தங்களுக்கு குடைச்சல் தந்துவிடக்கூடாது என்பதிலும், வரப்போகிற இந்த 3 வருஷத்துக்கு திமுகவின் அதிகாரம் செலுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. அந்தவகையில்தான், இந்தமுறை தேர்தலை மெல்ல ஜாக்கிரதையாக காய் நகர்த்தி வருகிறது.

 அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

வரும் 21-ம் தேதி பாஜக -அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும் என்று தெரிகிறது.. அதற்கான அறிவிப்பு டெல்லியில் வைத்தே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அங்கு கூட்டணி முடிவானால்தான், அதிமுக தலைமை கட்சிகளிடம் கூட்டணி உறுதி செய்யும் நிலைமையில் உள்ளது.. இந்நிலையில், ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.. அதன்படி, எந்த எந்த கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படும் என்ற லிஸ்ட் தரப்பட்டுள்ளது.

திமுக

திமுக

கடந்த 4 மாசமாகவே பாஜக 60 சீட் கேட்டு வருகிறது.. இப்போது 40 சீட்டாவது தங்களுக்கு தர வேண்டும் என்று அதிமுக தலைமையை நெருக்கி கொண்டுள்ளது.. பாஜகவுக்கு இவ்வளவு சீட் என்றால், பாமகவுக்கு தாராளத்தை காட்டுவது என்பது முடியாத காரியம். ஒருவேளை பாஜகவுக்கு அதிக சீட் தந்துவிட்டால், திமுகவை சமாளிக்க முடியாமல் போகும் நிலைமையும் அதிமுகவுக்கு உள்ளது.. அதுமட்டுமல்ல, சிறுபான்மையினர் ஓட்டுக்களையும் இழக்கக்கூடிய ஆபத்தும் அதிமுகவுக்கு உள்ளது.. அதனால்தான் 20 சீட்களை தரலாம் என்று யோசித்து வருவதாக தெரிகிறது..

 வன்னியர்கள்

வன்னியர்கள்

பாமகவை வைத்துதான் வடமாவட்ட பெல்ட்டில் உள்ள வன்னியர் ஓட்டுக்களை அள்ள வேண்டி உள்ளதால், 21 சீட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. தேமுதிகவுக்கு 10 என்று முதலில் கணிக்கப்பட்டது.. ஆனால், 14 சீட் வரை ஒதுக்க முடிவாகி உள்ளது.. தமாகாவுக்கு 5 சீட்கள், மற்ற கட்சிகளுக்கு 3 சீட் ஒதுக்கப்படுகிறது. அப்படியானால், கூட்டணிகளுக்கு ஒதுக்கியது போக, மிச்சமுள்ள 171 தொகுதிகளில் அதிமுக நேரடியாகவே களமிறங்க ரெடியாகிவிட்டது..

டெல்லி

டெல்லி

இதெல்லாம் ஒரு உத்தேச பட்டியல் என்றாலும், அதிமுகவின் அடுத்த அதிரடியாகவே இதை எடுத்து கொள்ளலாம்.. ஏனென்றால், திமுகவில் இப்படி ஒருபட்டியல் இன்னும் வெளியாகவில்லை.. அதேசமயம், இந்த உத்தேச பட்டியலில் ஒருசில மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கலாம்.. மற்றபடி அதிமுகவில் ஏற்கனவே இருக்கின்ற கட்சிகளே கூட்டணியை தொடர்கின்றன என்பதும், அதற்கான அச்சாரம் டெல்லியில் விரைவில் போடப்பட்டு விடும் என்பதும் தெளிவாகி கொண்டிருக்கிறது.

 
 
 
English summary
AIADMK candidate list released and who is contesting in which constituencies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X