சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லோக்சபா & சட்டமன்ற இடைத்தேர்தல்.. இன்று ஒரே நாளில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

    சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

    இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 18 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

    AIADMK Candidates will file their nominations today for Lok Sabha and by-elections

    சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி (தனி), திருநெல்வேலி, நாகப்பட்டனம் (தனி),மயிலாடுதுரை, திருவள்ளூர் (தனி), காஞ்சிபுரம் (தனி), தென் சென்னை ஆகிய லோக்சபா தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது .

    அதேபோல் பூந்தமல்லி (தனி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் (தனி),ஆம்பூர்,ஒசூர், பாப்பிரெட்டி,அரூர் (தனி),நிலக்கோட்டை (தனி),திருவாரூர்,தஞ்சாவூர்,மானாமதுரை,ஆண்டிப்பட்டி,பெரியகுளம் (தனி),சாத்தூர்,பரமககுடி (தனி), விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.

     லோக்சபா தேர்தல்.. தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி.. அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இதோ! லோக்சபா தேர்தல்.. தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி.. அமமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இதோ!

    இவர்கள் அனைவரும் இன்று ஒன்றாக வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்று காலை 11 மணிக்கு பிறகு இவர்கள் எல்லோரும் ஒன்றாக வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

    கடந்த 19ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தமிழகத்தில் இன்று தொடங்கியது. மார்ச் 26 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

    வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை மார்ச் 27ம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற 29ம் தேதி வரை அவகாசம் ஆகும். ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, பின் மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

    English summary
    AIADMK Candidates' will file their nominations today morning 11.30 for Lok Sabha and by-elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X