சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் சலசலப்பு.... இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா.. "அவர்" பேசிய அந்த ஒரு பேச்சுதான்!

ராஜேந்திர பாலாஜியின் பேட்டிதான் ஓபிஎஸ் தரப்பை கடுப்பாக்கிவிட்டதாக கூறுகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று ஒரே நாளில் அதிமுக தமிழகத்தையே மிரள வைத்துவிட்டது.. ஆனால் இது எல்லாத்துக்கும் காரணம் யார்? எதனால் இப்படி ஒரு பிரச்சனை இன்றைய தினம் வெடித்தது என்பதுதான் குழப்பமாக உள்ளது.

இந்த 3 வருடமாகவே அதிமுகவுக்குள் பிரச்சனை இருக்கதான் செய்கிறது.. எல்லாருமே இணக்கமாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

முதல்வர், துணை முதல்வர் என்ற 2 பெரும் ஆளுமைகளின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது.. ஆளுக்கு ஒரு பக்கம் அதிகாரங்களை கையில் வைத்துள்ளனர் என்றும், அதன்படியே மா.செ.க்கள் முதல் நிர்வாகிகள் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

தெறிக்கவிட்ட அதிமுக.. பீச்சில் சத்தியம் செய்துவிட்டு போன சசிகலா... ரிட்டர்ன் ஆனா என்னல்லாம் நடக்குமோதெறிக்கவிட்ட அதிமுக.. பீச்சில் சத்தியம் செய்துவிட்டு போன சசிகலா... ரிட்டர்ன் ஆனா என்னல்லாம் நடக்குமோ

கூட்டணி

கூட்டணி

ஆனால், இப்போது வெடித்து விட்டது.. இதற்கு காரணம், கொரோனா பரபரப்பு ஓரளவு முடிந்துவிட்டதும், சட்டசபை தேர்தலை அனைவரும் எதிர்நோக்கி உள்ளதும்தான்.. அதற்கான வியூகங்களை எல்லா கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.. கூட்டணி சம்பந்தமான பேச்சும் பகிரங்கமாக வெளியே வந்துவிட்டது. அதனாலேயே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் விவகாரம் எழுந்துள்ளது.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

அதேபோல, இதற்கெல்லாம் யார் காரணம், எதனால் இன்றைய தினம் இந்த விவகாரம் வெடித்தது என்பதையும் ஒருசிலரிடம் விசாரித்தோம்.. அப்போது சில அமைச்சர்களின் பேச்சுதான் இந்த விவகாரம் கிளம்புவதற்கே காரணம் என்கிறார்கள்.. முக்கியமாக ராஜேந்திர பாலாஜி!

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

"இவரது பதவியை பிடுங்கி, மறுபடியும் அவரிடத்தில் தந்தார் முதல்வர்.. அப்போதிருந்தே கொஞ்சம் சூடாகவே பேசிவருகிறார் அமைச்சர்.. இதை மேலோட்டமாக பார்த்தால் திமுகவுக்கு எதிரானது போலவும், அதாவது ஸ்டாலினை நேரடியாக குற்றம் சொல்வது போலவே தெரியும்.. ஸ்டாலினுக்கு சவால் விடும்போதெல்லாம், ஸ்டாலினுக்கு பதில் செல்லும்போதெல்லாம் ராஜேந்திர பாலாஜி சொல்வது எடப்பாடியாரை புகழ்ந்துதான்.

கதம்.. கதம்

கதம்.. கதம்

"திமுக இனி கதம் கதம்" என்று சொன்னாலும், "2021 தேர்தலை எடப்பாடியாரை மையமாக வைத்துதான் சந்திப்போம். அவரே அடுத்த முதல்வர்" என்பதையே தொடர்ந்து சொல்லி வந்தார்.. அப்போதே இது ஓபிஎஸ் தரப்புக்கு எரிச்சலை தந்ததாம்.. அமைச்சரை முதல்வரும் எதுவுமே சொல்லவில்லை.. ஒருவேளை கண்டித்திருந்தால் இன்றைக்கு இந்த விவகாரம் இந்த அளவுக்கு வெடித்து வந்திருக்காது.

போஸ்டர்கள்

போஸ்டர்கள்

தேனியில் போஸ்டர் ஒட்டப்பட்டதுமே அதிமுக தலைமை பரபரப்பாகிவிட்டது... இப்போது ஆளுக்கு ஒரு பக்கம் இதை சமாதானம் செய்ய பார்த்தாலும், விவகாரத்தை சுமூகமாக முடிக்க பார்த்தாலும், நிச்சயம் இந்த விவகாரம் இன்றோடு முடியாது" என்கிறார்கள்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஆனால், இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை, அல்லது பரபரப்புக்காக சொல்லப்படுவதா என்றும் தெரியவில்லை.. ஜெயலலிதா எப்படி எப்படியோ பாடுபட்டு.. கட்டிக்காத்து வந்த அதிமுக என்ற ஆலமரம் ஏற்கனவே 2 ஆக உடைந்துவிட்டது.. இப்போது உட்கட்சி பூசலும் வெடித்து கிளம்பி உள்ளது.. இதன் முடிவுகள் எப்படி இருக்குமோ தெரியவில்லை.. இருந்தாலும் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் அதிமுகவை இன்னும் சில நாட்களுக்கு ஆட்டி படைக்கும் என்று மட்டும் தெரிகிறது.

English summary
AIADMK CM Candidate Issue: minister rajendra balajis controversy interviews
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X