சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கே இவ்வளவு நடந்துட்டு இருக்கு.. "அவர்" எங்கே போனார்.. வாய் திறக்காதது ஏன்.. கிளம்பும் சந்தேகங்கள்

முதல்வர் வேட்பாளர் அறிவித்தும் டிடிவி தினகரன் அமைதி காத்து வருகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: இவ்வளவு நடந்துட்டு இருக்கு.. ஆனால், இதுவரை டிடிவி தினகரன் வாயே திறக்கவில்லையே... எங்கிருக்கிறார்? என்ற சலசலப்புகள் எழுந்துள்ளன.

கடந்த 10 நாட்களாக அதிமுகவில் நடந்த வெளிப்படையான பூசல்களுக்கும், பஞ்சாயத்துக்கும் காரணமே வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையால்தான்.

மேலோட்டமாக முதல்வர் வேட்பாளர் என்று சொல்லப்பட்டாலும், 2017ல் போட்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இப்போது வந்து கோரிக்கை வைத்து போர்க்கொடி உயர்த்த காரணமே, டிடிவி தினகரனின் திடீர் டெல்லி பயணம்தான் என்று சொல்லப்பட்டது.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

இந்த 3 வருடங்களாக எடப்பாடி தரப்பு தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவே டிடிவி தினகரன் சொல்லி வரும்நிலையில், ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வர் வேட்பாளராகி உள்ளார் எடப்பாடியார்.. எம்ஜிஆர், ஜெயலலிதா, அடுத்து எடப்பாடியார் என்ற வரிசையில் அலங்கரித்துள்ளார். அந்த வகையில் இதை பற்றி டிடிவி தினகரன் இதுவரை வாயே திறக்காததும் கவனிக்கப்பட்டு வருகிறது.

எடப்பாடியார்

எடப்பாடியார்

இந்த 3 வருடங்களாக எடப்பாடி தரப்பு தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவே டிடிவி தினகரன் சொல்லி வரும்நிலையில், ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வர் வேட்பாளராகி உள்ளார் எடப்பாடியார்.. எம்ஜிஆர், ஜெயலலிதா, அடுத்து எடப்பாடியார் என்ற வரிசையில் அலங்கரித்துள்ளார். அந்த வகையில் இதை பற்றி டிடிவி தினகரன் இதுவரை வாயே திறக்காததும் கவனிக்கப்பட்டு வருகிறது.

முடக்கம்

முடக்கம்

அதுமட்டுமல்ல, சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் என்ற செய்திக்கும் அவர் எதுவுமே கருத்து சொல்லவில்லை. இதைபற்றி சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: எல்லா கட்சிகளும் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன.. கூட்டணி, சீட் பேரம் பற்றின பேச்சுக்களையும் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளன.. தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் வெளியே தலைகாட்டாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்து வருகிறது.

மசோதா

மசோதா

கொரோனா டைமிலும் மற்ற கட்சிகள் ஆன்லைனில் கட்சிக்காரர்களை சந்தித்தார்களே.. திமுக இந்த விஷயத்தில்தான் இப்போது வரை கெத்துகாட்டி வருகிறது. அப்படிக்கூட இவர் யாரையும் சந்தித்து பேசாதது அக்கட்சிக்கு பலவீனமே. இதுக்கு முன்பே, புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்ட மசோதா இப்படி மத்திய அரசின் கொள்கைகளுக்குகூட இவர் எந்தவித எதிர்ப்பும் சொல்லாமல்தான் இருக்கிறார்.

அமைதி

அமைதி

ஒருவேளை பாஜகவை பகைத்து கொள்ளக்கூடாது என்பதால் அமைதி காக்கிறாரா அல்லது ஒருவேளை ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே இணக்கம் ஏற்படாமல் போனால், அதை வைத்து கட்சியை இணைக்க திட்டமிடலாம் என்றிருந்தது இப்போது சறுக்கலை தந்துள்ளதால் அமைதியாக இருக்கிறாரா? அல்லது சொத்துக்கள் முடக்கம் என்ற செய்தியால் அதிர்ச்சியில் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.. இதில் எதுவாக இருந்தாலும் சரி, கட்சிக்காரர்களிடம் எப்பவுமே நெருங்கி இருந்தால்தான் மட்டுமே, திமுக, அதிமுகவை ஓரளவு சமாளிக்க முடியும் என்றனர்.

 கட்சி பணி

கட்சி பணி

இதையடுத்து, அமமுக நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, "அவர் எங்கேயும் போய்விடல.. எல்லாவற்றையும் கவனிச்சிட்டுதான் வர்றார்.. கட்சியை பலப்படுத்தும் பணி ஒருபக்கம் கட்சியிலும், இன்னொரு பக்கம் சசிகலா விடுதலை விவகாரத்திலும் கவனம் செலுத்திட்டு இருக்கார்.. இப்பகூட தேனி மாவட்டத்தை 2 ஆக பிரித்து நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

அமமுகவின் உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.. அதிமுகவில் யார் முதல்வர் என்ற போட்டி, பிரச்சனைகளை பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை. இருந்தாலும், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கண்டிப்பாக கருத்து ஏதேனும் சொல்வார் என்றுதான் நாங்களும் நினைத்தோம்.. ஆனால் அவர் அமைதியாக இருப்பதன் அர்த்தம் தெரியவில்லை.. எப்படியும் பெரிய திட்டம் நிச்சயம் இருக்கும்.. அதனால், எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை கொஞ்சமும் குறையவில்லை.. களப்பணியில் நாங்கள் தீவிரமாக இறங்கி உள்ளோம்" என்று உறுதியாக சொன்னார்கள்.

English summary
AIADMK CM Candidate: Why AMMK TTV Dinakaran is silence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X