தஞ்சை மாணவி தற்கொலை : பள்ளி நிர்வாகம் செய்த தவறுதான் காரணம்- அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
சென்னை : தஞ்சை பள்ளி மாணவி செல்வி லாவண்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிறுபான்மை மத கல்வி நிறுவனம் ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
கட்டாய மதமாற்றம் செய்யச்சொல்லி மாணவியை பள்ளி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகி துன்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை
இந்நிலையில் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா" என்று பாடிய கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் பிறந்த தமிழ் மண்ணில், "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று பாடிய மகாகவி பாரதியார் பிறந்த தமிழ்நாட்டில், கடந்த எட்டு மாதங்களாக பெண்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு தொந்தாரவுகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருவது தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிர்ச்சி
கடந்த எட்டு மாத காலமாக பாலியல் புகார் காரணமாக ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பது, பள்ளியில் தீயில் கருகிய நிலையில் பத்து வயது சிறுமி மர்மமான முறையில் இறப்பது என தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன என கூறியுள்ள ஓபிஎஸ், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி என்னும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் விடுதிக் காப்பாளர் அளித்த துன்புறுத்தலால் மனஉளைச்சல் ஏற்பட்டு களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ஆற்றொனாத் துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும் எனக்கு அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு கோரிக்கை
பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ ஒரு பிரச்சனை இருக்கிறது. என்றால் அதைத் துணிவுடன் பெற்றோர்களிடத்தினோ அல்லது பள்ளி நிர்வாகத்திடமோ தெரிவித்து அந்தப் பிரச்சனையிலிருந்து வெளி முயற்சிக்க வேண்டுமே தவிர, இதுபோன்று உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்றும், எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டம் என்றும் மாண மாணவியரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ள பன்னீர்செல்வம், செல்வி லாவாண்யா இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை வீட்டிற்கு அனுப்பாமல் கணக்குகளை பராமரிக்கச் சொன்னதாகவும், மறுத்தால் திட்டுவார் என்றும், விடுதியில் எதாவது பொருள் காணாமல் போனாலும் அதற்கு தான்தான் காரணம் என்று கூறி திட்டுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் தவறு
அதே சமயத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவருடைய உறவினர் விசாரித்தபோது மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய அந்த குறிப்பிட்டதாகவும், இதற்கான வீடியோ இருப்பதாகவும் ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால், அரசுத் தரப்போ செல்வி வாவண்யாவின் தற்கொலைக்கும், மத மாற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறது. மற்றொரு தரப்பு கழிவறைகளை சுத்தம் செய்யவும் விடுதிகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை பள்ளி நிர்வகம் அளித்ததே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று கூறுகிறது என குறிப்பிடுள்ள ஓபிஎஸ், காரணம் எதுவாக இருந்தாலும் செல்வி லாவண்யா இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் செய்த தவறுதான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது எனவும், இது கடும் கண்டனத்திற்குரியது. மேற்படி சிறுமியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என தனது அறிக்கையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

முதல்வருக்கு கோரிக்கை
எனவே மான்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி, அரசியலுக்கு அப்பாற்பட்டு, செவ்வி தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடித்த அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்னாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி கழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றச் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.