சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: இப்படி ஒரு செய்தி உலா வருகிறது. ஆனால் இது உண்மையா, இல்லையா என்பது தெரியவில்லை. அதாவது திமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் எது, திமுக முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள் எது என்பது குறித்து அதிமுக பட்டியலெடுத்து வருவதாகவும், அந்த தொகுதிகளிலும் குறிப்பட்ட அளவு தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே தொடக்கத்திலோ நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.

சட்டசபை தேர்தலில் அதிமுக ஒரு அணியாகவும், திமுக ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அதிமுக அணியில் பாமக,பாஜக, தேமுதிக ஆகியவை உள்ளன. இதில் பாமக, தேமுதிக கட்சிகள் எந்த முடிவை எடுக்க போகின்றன என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வாய்ப்பு உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம் லீக் ஆகியவை உள்ளன.

அமித்ஷா

அமித்ஷா

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொதிகளை கேட்டு வருகிறது. அண்மையில் சென்னை வந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது 60 தொகுதிகள் தர வேண்டும், அதுவும் முக்கியமான செல்வாக்கு உள்ள தொகுதிகளை தர வேண்டும் என்று வலியுறுத்தினார்களாம்

எத்தனை தொகுதிகள்

எத்தனை தொகுதிகள்

ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால், சிறிய கட்சிகளுக்கு நாங்களே தொகுதிகளை ஒதுக்கிவிடுகிறோம் என்று பாஜக மேலிடம் கூறியதாம். ஆனால் 30 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது எனறு அதிமுக பிடிவாதமாக உள்ளதாம். இதனால் தொகுதி பங்கீட்டில் இதுவரை இழுபறி நீடிக்கிறது. அண்மையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி சந்தித்து பேசிய போது கூட உடன்பாடு எட்டப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

அதிமுக திட்டம்

அதிமுக திட்டம்

அதிக தொகுதிகள் கேட்கும் பாஜகவுக்கு 31 தொகுதிகள் வரை அதிமுக ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது அதேநேரம் அதிமுக பாஜகவின் நெருக்கடி காரணமாக இவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்திருப்பதாகவும், பாஜகவுக்கு எப்படிப்பட்ட தொகுதிகளை தரப்போகிறது என்பது குறித்தும் சில தகவல்கள் உலா வருகின்றன.

சர்வே எடுக்கும் அதிமுக

சர்வே எடுக்கும் அதிமுக

அதாவது பாஜக கேட்ட தொகுதிகளை வழங்காமல், திமுகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதிகளில் சிலவற்றை தர அதிமுக முடிவு செய்திருக்கிறதாம். திமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள், திமுகவின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுக கணக்கெடுத்து வருவதாகவும், அவற்றில் இருந்து தான் 31 தொகுதிகளை அதிமுக, பாஜகவுக்கு தரப்போவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இதனால் பாஜக கலக்கத்தில் உள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

English summary
AIADMK is listing the constituencies in which the DMK has influence and which DMK chief executives are contesting. It plans to give a certain amount of seats to the BJP, the coalition party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X