சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"விஜயகாந்த் இருப்பதே வெற்றிக் கூட்டணி".. அப்ப மக்கள் நலக் கூட்டணி?.. அதிமுக பொளேர் கேள்வி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவினரின் கோபத்தை கிளப்பும் வகையில் விஜயகாந்த் குடும்பத்தினர் பேசி வருவது அதிமுகவினரை கோபத்தில் தள்ளியுள்ளதாம்.

2006-ஆம் ஆண்டு தொடங்கிய தேமுதிக 2016 ஆம் ஆண்டு வரை அதாவது விஜயகாந்த் வசம் இருந்த வரை சீரும் சிறப்புமாக இருந்து வந்தது. ஆனால் அவரது உடல்நிலை பாதிப்பால் அவருக்கு பதிலாக அவரது மனைவி, மகன், மச்சான் என கட்சியை "வழிநடத்தி" வருகிறார்கள்.

காரியம் பெரிசா வீரியம் பெரிசா என கேட்பார்கள். அது போல் தொகுதி பங்கீடு வரை வாயை திறக்காமல் இருந்தாலே தேமுதிகவுக்கு விஜயகாந்த் குடும்பத்தினர் செய்யும் நல்லது என தேமுதிக நிர்வாகிகள் தங்களுக்குள் முணுமுணுத்து கொள்கிறார்கள்.

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்!திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்!

யானை மீது உட்கார்ந்து கொண்டு

யானை மீது உட்கார்ந்து கொண்டு

அந்த வகையில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு அதிமுகவுடனும் திமுகவுடனும் கூட்டணி பேசி வந்ததும் இதை திமுக மூத்த தலைவர் ஒருவர் வெளிப்படையாக அறிவித்ததும் அக்கட்சியின் வேண்டுமென்றே யானை மீது உட்கார்ந்து கொண்டு சுண்ணாம்பு கேட்ட கதையாக இருந்தது. மிகவும் கிராக்கி செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

அத்துடன் உள்ளாட்சி தேர்தல் வரை பதுங்கியே இருந்த விஜயகாந்த் குடும்பத்தினர் இப்போது வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். அதில் அதிமுக தொண்டர்களை உசுப்பேத்தும் விதமாக சுதீஷ் ஒரு கருத்தை கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் கூட்டணிக்காக அதிமுக பின்னாடி நாம் செல்லவில்லை. அதிமுகதான் நம்மைக் கெஞ்சுகிறது. நாம் அவர்களைக் கெஞ்சவில்லை.

கூட்டணி அமைத்தால் தயார்

கூட்டணி அமைத்தால் தயார்

தேமுதிக எந்தக் கூட்டணியில் சேர்கிறதோ அந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் வரத் தயாராக இருப்பதாக நிறைய கட்சிகள் நம்மை அணுகிறார்கள் என்றெல்லாம் பேசியுள்ளார் சுதீஷ்.

கோபத்தில் தொண்டர்கள்

கோபத்தில் தொண்டர்கள்

இதனால் அதிமுக தொண்டர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். கான்ஃபிடன்ஸ் இருக்கலாம், ஓவர் கான்ஃபிடன்ஸ் இருக்கக் கூடாது. ஒரு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே அக்கட்சி மீது தேவையில்லாத தவறான விமர்சனங்களை முன் வைப்பது எந்த வகையில் நியாயம் என்கிறார்கள் அதிமுகவினர். அவர்களால் தனித்து போட்டியிட முடியும் என்றால் அதை இப்போது செய்ய வேண்டியதுதானே என்று அதிமுகவினர் கேட்கிறார்கள்.

பதிலடி விவாதம்

பதிலடி விவாதம்

தேமுதிக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெறும் என்றால் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி அமைந்த சட்டசபை தேர்தலிலும் தேமுதிகவின் நிலை என்ன என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு பேச வேண்டும் என அதிமுக தொண்டர்கள் பதிலடி விவாதம் நடத்தி வருகிறார்கள்.

English summary
AIADMK criticises DMDK for Sudhish comments on that if AIADMK not made alliance with Dmdk on 2011 then the former would not have alive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X