சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்களுக்கு 2.. பாமகவுக்கு 1.. உங்களுக்கு இப்போதைக்கு ஒன்னுமில்லை.. பாஜகவை கழற்றி விட்ட அதிமுக

பாஜகவுக்கு ராஜ்ய சபா சீட்டினை அதிமுக ஒதுக்கவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்மகன் உசேனுக்கு ராஜ்யசபா சீட்டுக்கு வாய்ப்பு இருக்காம் !- வீடியோ

    சென்னை: ராஜ்யசபா சீட்டுக்கு 2 வேட்பாளர்களின் பெயரை அறிவித்துள்ளது அதிமுக. ஆனால் அதில் பாஜகவுக்கு சீட் இல்லை என்பதுதான் ஹைலைட் சமாச்சாரமே!

    தேர்தல் ரிசல்ட் எப்போது வந்ததோ அப்போதே அதிமுக-பாஜகவுக்குள் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது. ஒரு தொகுதியில்கூட எப்படி ஜெயிக்க முடியாமல் போனது, எங்களுக்கு காரணம் வேண்டும் என்று பாஜக தரப்பு மாநில தலைமையை கேட்டது.

    மாநில தலைமையோ, "எங்களுக்காக அதிமுகவில் சரியாக வேலைபார்க்கவில்லை, பிரச்சாரத்திற்கும் வரவில்லை, கூட்டணி கட்சிகள் யாரும் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இடைத்தேர்தலில் மட்டுமே அதிமுக கவனம் செலுத்தியது" என்று காரணங்களை அடுக்கவும் அமித்ஷா அதிர்ந்தே போய்விட்டார்.

    வேலூரில் எதிர்பார்த்த படி போட்டி... திமுக சார்பில் மீண்டும் களமிறக்கப்பட்ட கதிர் ஆனந்த் வேலூரில் எதிர்பார்த்த படி போட்டி... திமுக சார்பில் மீண்டும் களமிறக்கப்பட்ட கதிர் ஆனந்த்

    பியூஷ்கோயல்

    பியூஷ்கோயல்

    இதையடுத்து அதிமுக சார்பில் டெல்லிக்கு சென்ற 2 முக்கிய அமைச்சர்கள், பியூஷ்கோயல், அமித்ஷாவை நேரில் சந்தித்து எவ்வளவோ விளக்கம் கொடுத்தும் அவர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது. தனியாக நின்றிருந்தால் நாங்கள் கண்டிப்பாக ஜெயித்திருப்போம் என்று இரு தரப்பு கட்சிகளுமே கருத்து தெரிவித்ததாக சொல்லப்பட்டது.

    பாஜக

    பாஜக

    ஆக மொத்தம் என்னால நீ கெட்டே, உன்னால நான் கெட்டேன் என்று ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில், இரு கட்சிகளிடம் விரிசல் எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல் குறுக்கிட்டது. அதில் பாமகவுக்கு ஒரு சீட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாஜகவும் திடீரென சீட் கேட்பதாக தகவல்கள் வெளியாகின.

    இஸ்லாமியர்

    இஸ்லாமியர்

    இந்த ஒரு சீட் யாருக்கு கிடைக்க வாய்ப்பு என்று ஒரு பெரிய லிஸ்ட்டே அனுமானத்திலும் கசிந்தது. எப்படியும் ஒரு சீட் கிடைத்துவிடும் என்பதால் பாஜகவும் அதிமுக தரப்பை பெரிசாக பகைத்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது பாஜகவுக்கு ராஜ்ய சபா சீட்டை அதிமுக அளிக்கவில்லை. ஏற்கனவே சீட் தராத அதிருப்தியில் முஸ்லீம்கள் இருந்ததால், அவர்களை சாந்தப்படுத்த கண்டிப்பாக இஸ்லாமியர் ஒருவருக்கு தரப்படும் என்று சொல்லப்பட்டது.

    விக்கிரவாண்டி

    விக்கிரவாண்டி

    அதன்படியே முகமது ஜானுக்கு ஒரு சீட்டும், சந்திரசேகரனுக்கு ஒரு சீட்டும் தந்துள்ளது. 7+1 என்ற ஒப்பந்தப்படி பாமகவுக்கு சொன்னபடியே ஒரு சீட் தந்துவிட்டது. வேலூர் தொகுதி தேர்தல், விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் பாமகவின் தயவு கண்டிப்பாக அதிமுக தேவை என்பதும் இதன் பின்னணி காரணம் ஆகும்.

    நெருக்கம்

    நெருக்கம்

    பாஜகவுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த பட்சத்தில், அது இப்போது நடக்கவில்லை. பாஜகவை விட்டு அதிமுக விலகி உள்ளதை காட்டுவதாக இந்த சீட் விவகாரம் காட்டுகிறது. இதுபோக, எப்படியும் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து நின்றுதான் பலத்தை காட்ட உள்ளது என்பதால், பாஜகவுடனான நெருக்கம் இனி குறையவே செய்யும் என தெரிகிறது. ஆனால் இதை பாஜக எப்படி எடுத்து கொள்ளும், இதன் பலாபலன்கள் என்னாகும், அதை எப்படி அதிமுக சமாளிக்கும் என்பது போக போகத்தான் நமக்கு புரியும்.

    English summary
    AIADMK candidate announced for Rajya sabha elections but aiadmk didnt give the seat to BJP
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X