சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு சீட்டும் கிடைக்கலையே.. பெரும் ஏமாற்றத்தில் அதிமுக சீனியர்கள்.. என்ன செய்ய போகிறார்கள்?

சீட் கேட்ட மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனரா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரும் ஏமாற்றத்தில் அதிமுக சீனியர்கள்.. என்ன செய்ய போகிறார்கள்?- வீடியோ

    சென்னை: எத்தனையோ பேர் லிஸ்ட்டில் காத்து கிடந்தும், அதில் சம்பந்தமே இல்லாத 2 ராஜ்ய சபா வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

    அதிமுகவுக்கு 3 எம்பிக்களை தேர்ந்தெடுத்து அனுப்பும் சூழல் உள்ளது. ஒன்று பாமகவுக்கு போக, மீதமுள்ள 2 சீட்டுக்கு 2 மாதத்துக்கு முன்பிருந்தே யார் வாங்குவது என்ற பேச்சு எழ ஆரம்பித்துவிட்டது.

    கோகுல இந்திரா, பொன்னையன், மனோஜ் பாண்டியன், முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், வேணுகோபால் என பல்வேறு பெயர்கள் அடிபட்டன. மற்ற விவகாரங்களை போலவே சீட் ஒதுக்குவதிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி செயல்பட்டு வந்தது.

    அன்வர் ராஜா

    அன்வர் ராஜா

    தம்பிதுரை, வேணுகோபால், அன்வர் ராஜா ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சீட் கேட்டு நெருக்கி வந்தனர். இன்னொரு பக்கம், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் சந்தித்து சீட் கேட்டு நெருக்கி வந்ததாக சொல்லப்பட்டது. எப்படியும் 2 சீட் இருப்பதால், இரு அணி சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஆளுக்கு ஒன்றாக பிரித்து தருவதாகவும் சொல்லப்பட்டது.

    தமிழ் மகன் உசேன்

    தமிழ் மகன் உசேன்

    ஆனால் எதுக்கு வம்பு.. பேசாமல் இரு அணிக்கும் பொதுவான தமிழ்மகன் உசேனுக்கு சீட் தந்துவிடலாம் என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால் இப்போது இந்த லிஸ்ட்டிலேயே இல்லாத முகம்மது ஜான், சந்திரசேகரன் ஆகியோரின் பெயர்கள் வெளியாகி உள்ளன.

    சீனியர்கள்

    சீனியர்கள்

    தங்களுக்குதான் சீட் தந்தே ஆக வேண்டும் என்று இருதரப்பு தலைமையையும் நெருக்கி வந்த சீனியர்கள் இதை எப்படி எடுத்து கொள்வார்களோ தெரியவில்லை. எங்களுக்கு எம்பி தேர்தலில்தான் சீட் தரவில்லை, இதிலாவது தாருங்கள் என்று கேட்டு அதிமுகவிடம் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். ஒருசிலர் பாஜக மூலமாகவும் சென்று சீட்டுக்காக முயற்சி செய்கிறார்கள் என்றுகூட சொல்லப்பட்டது.

    மூத்த தலைவர்கள்

    மூத்த தலைவர்கள்

    ஆனால் இந்த 2 பேரின் புதிய அறிவிப்பு மூத்த தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவே செய்யும். அதனால் எப்படியும் கட்சிக்குள் உட்பூசல் அதிகரிக்குமா, தலைமைக்கு வேறு வகையில் நெருக்கடி தர முயல்வார்களா, அல்லது இணக்கத்துடனேயே தொடர்ந்து செயல்பட போகிறார்களா என்றெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

    English summary
    AIADMK has announced Rajya Sabha seat and didnt give the seat to the Senior Leaders
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X