பரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதியாகியுள்ள நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என அடுத்தடுத்து அதிமுகவிலிருந்து இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா, பாஜகவுக்கான தொகுதி ஒதுக்கீடு, சசிகலா விடுதலை உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 27-ம் தேதியன்று நடைபெறும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவை மிகபிரமாண்டமாக நடத்த முடிவெடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன்னு அவரே சொல்லிட்டாரு.. இவங்க பாருங்க வில்லனு சொல்றாங்க!
ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவை வரவேற்க ஒசூருக்கு செல்லும் கூட்டத்தை காட்டிலும் சென்னை மெரினாவில் நடைபெறும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கான கூட்டம் தான் பெரியளவில் இருக்க வேண்டும் என எண்ணுகிறார் முதலமைச்சர். இது தொடர்பாக 22-ம் தேதி நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர் விரிவாக பேசுவார் எனத் தெரிகிறது.