சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உட்கட்சி மோதல் : அதிமுக கூட்டத்தில் கடும் விவாதம்- 2 அமைச்சர்கள், 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ்- ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ

    சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 2 அமைச்சர்கள், 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. இவர்களில் 3 எம்.எல்.ஏக்கள் தினகரன் ஆதரவாளர்கள் என்பதால் அவர்களுக்கு அழைப்பே அனுப்பவில்லை.

    Newest First Oldest First
    2:07 PM, 12 Jun

    'பொது செயலாளர்' பேச்சுக்கே இடமில்லை- வைத்திலிங்கம்

    அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
    1:25 PM, 12 Jun

    கட்சி கட்டுப்பாட்டை மீறினால்...

    அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அக்கட்சி தலைமை எச்சரித்துள்ளது.
    1:08 PM, 12 Jun

    அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு தடை

    அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு தடை
    அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது; அடுத்த அறிவிப்பு வரும் வரை கருத்துகளை கூற கூடாது என அதிமுக தலைமை அறிக்கை மூலம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
    1:05 PM, 12 Jun

    12 பேர் கொண்ட நிர்வாகக் குழு- ஓபிஎஸ் யோசனை

    12 பேர் கொண்ட நிர்வாகக் குழு- ஓபிஎஸ் யோசனை
    அதிமுக ஆலோசனை கூட்டத்தில், கட்சியை நிர்வகிக்க 12 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை அமைக்கலாம் என துணை முதல்வர் ஓபிஎஸ் யோசனை ஒன்றை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    12:46 PM, 12 Jun

    பொறுத்திருந்து பார்ப்போம்- ராஜன் செல்லப்பா

    அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என ஆலோசனைக் கூட்டத்தில் மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டது; பந்தை எறிந்துள்ளேன்.. நடப்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறினார்.
    12:46 PM, 12 Jun

    5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
    அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் வாக்களித்தவர்கள் மற்றும் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    12:33 PM, 12 Jun

    தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்தோம்

    அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதித்தோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
    12:26 PM, 12 Jun

    ஈபிஎஸ்-ஓபிஎஸ் தனியே ஆலோசனை

    அதிமுக தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தனியே ஆலோசனை நடத்தினர்.
    12:15 PM, 12 Jun

    கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச தடை

    அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    12:08 PM, 12 Jun

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்தது

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்தது
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிவரை இந்த கூட்டம் நடைபெற்றது. உட்கட்சி விவகாரங்கள் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    11:35 AM, 12 Jun

    அதிமுகவில் நல்ல தலைமை இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர்; அதிமுகவுக்கு ஆளுமை மிக்க தலைமைதான் தற்போதைய தேவை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்துள்ளார். அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு பிரபுவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
    11:24 AM, 12 Jun

    அதிமுகவில் ராதாரவி

    அதிமுகவில் ராதாரவி
    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று அதிமுகவில் இணைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் ராதாரவி.
    11:19 AM, 12 Jun

    கலகக் குரல் குன்னம் ராமச்சந்திரனும் பங்கேற்கவில்லை

    அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை;
    11:18 AM, 12 Jun

    செல்போனுக்கு தடை

    செல்போனுக்கு தடை
    அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போனை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    11:07 AM, 12 Jun

    செங்கோட்டையன் பொதுச்செயலாளர்- காரைக்குடியில் போஸ்டர்

    செங்கோட்டையன் பொதுச்செயலாளர்- காரைக்குடியில் போஸ்டர்
    அதிமுகவின் பொதுச்செயலாளராக செங்கோட்டையன் வர வேண்டும் என காரைக்குடியில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    10:59 AM, 12 Jun

    2 அமைச்சர்கள் புறக்கணிப்பு

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை. சி.வி. சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் பங்கேற்கவில்லை எனவும் தகவல்.
    10:39 AM, 12 Jun

    சென்னையில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் கட்சி தோல்வி அடைந்தது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
    10:29 AM, 12 Jun

    அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    10:22 AM, 12 Jun

    ராஜ்யசபா எம்.பி. பதவிக் காலம் முடிவடைய உள்ள மைத்ரேயன் அதிமுக தலைமை அலுவலகத்தில் கவலையுடன் கவலை தோய்ந்த முகத்துடன் வலம் வந்தார்.
    10:10 AM, 12 Jun

    அதிமுகவின் ஆலோசனை கூட்டத்துக்கு தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி ஆகியோருக்கு அழைப்பு இல்லை.
    10:10 AM, 12 Jun

    அதிமுகவின் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில் மிக முக்கியமான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.
    10:10 AM, 12 Jun

    சென்னையில் அதிமுக தலைமைக் கழகம் அருகே எடப்பாடியை பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    AIADMK district secretaries meeting on today
    English summary
    AIADMK district secretaries meeting on today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X