சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணே இப்போதைக்கு வேணாம்! ஆனா கண்டிப்பா உண்டு! முன்னாள்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த இபிஎஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் மிக தீவிரமாகி வரும் நிலையில், பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் குறித்து தற்போது பேச வேண்டாம் என மூத்த முன்னாள் அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற வகையில் நீதிமன்றம் வரை சென்று அதனை முறியடித்தார்.

இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டது என்றும் அறிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி கொடுத்த தைரியம்! அப்பு செய்த காரியம்! காட்பாடியில் அரசியல் கலாட்டா! எடப்பாடி பழனிசாமி கொடுத்த தைரியம்! அப்பு செய்த காரியம்! காட்பாடியில் அரசியல் கலாட்டா!

அதிமுக மோதல்

அதிமுக மோதல்

தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டாலும், கட்சியினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் எனவே அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி வைத்துள்ளார் எடப்பாடி. முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகளை வகித்து வந்த போதும், கட்சிக்குள் தனக்கான ஆதரவு வட்டத்தை பெருக்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து வந்த பன்னீர் செல்வம் தற்போது அதனை நினைத்து வருத்தப்பட்டாலும், அதனால் ஒரு பலனும் இல்லை.

புது சிக்கல்

புது சிக்கல்

இந்நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புது சிக்கல் உருவாகியிருக்கிறது. அது பொருளாளர் பதவி. அதிமுகவில் பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக அவை தலைவர் என்ற பொறுப்பு இருந்தாலும் அதிகாரமிக்க பொறுப்புகளில் ஒன்று பொருளாளர் பதவி. தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக வகித்து வரும் பொருளாளர் பதவியை அடுத்த பொதுக்குழுவில் பறித்து விட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

கூடாரத்தில் குழப்பம்

கூடாரத்தில் குழப்பம்

இதனால்தான் அந்த புது சிக்கலை உருவாகி இருக்கிறது அதாவது அந்த பொருளாதாரப் பதவியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் அல்லது சிவி சண்முகத்துக்கு இந்த பதவியை வழங்கலாம் என திட்டமிட்டு இருந்தாலும் அவரது தரப்பில் உள்ள பல மூத்த முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் அந்த பதவியை தங்களுக்குத் தான் வழங்க வேண்டும் என கூறி வருவது அவரது கூடாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி

முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி

இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மிக தீவிரமாக இயங்கி வந்த கேபி முனுசாமி, பொன்னையன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சமாதானம் செய்ய முயன்று வருகிறது. தற்போதைக்கு அதிமுக தலைமையை நாம் கைப்பற்றி விட்டால் பிறகு அனைத்து அதிகாரமும் நமது பக்கம் வந்து விடும் அப்போது பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் குறித்து பேசி தீர்த்துக் கொள்ளலாம் என இபிஎஸ் தற்போதைக்கு சொல்லி வைத்துள்ளார்.

Recommended Video

    OPS-க்கு பதில் கடிதம் எழுதிய EPS... திமிறி எழும் 5 சந்தேகங்கள் *Politics
    நிர்வாகிகள் தீவிரம்

    நிர்வாகிகள் தீவிரம்

    எனவே தற்போது அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை கைப்பற்ற வேண்டியது அவசியம் மேலும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ,பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டு சேரலாம் எனவும் எதிர்பார்க்கப்படும் நிலையில் எதிர்வரும் சட்ட சிக்கல்களை சந்திக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். எனவே எந்த விவகாரம் இருந்தாலும் பொதுக்குழுவுக்கு பிறகு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிச்சாமி மூத்த நிர்வாகிகளை சமாதானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விவகாரம் இன்னும் ஓயவில்லை வரும் நாட்களில் இன்னும் தீவிரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    As the conflict between Edappadi Palanisamy and O. Panneerselvam regarding the issue of single leadership in the AIADMK is getting very intense, it has been reported that Edappadi Palanisamy has requested the senior ex ministers not to talk about the posts including treasurer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X