சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்களை முதல்வர் வேட்பாளர்னு ஏன் அறிவிக்கனும்? இந்த ஆட்சி மோசமா?ஈபிஎஸ் டீமின் கேள்விகளால் ஓபிஎஸ் ஷாக்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் தம்மையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சரமாரி கேள்விகளால் மடக்கிவிட்டனராம்.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டம் 5 மணிநேரம் நடைபெற்றது.

அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது அதிரடி அறிவிப்பு அதிமுக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது அதிரடி அறிவிப்பு

முதல்வர் வேட்பாளர் விவாதம்

முதல்வர் வேட்பாளர் விவாதம்

இன்றைய செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்துதான் முழு அளவில் விவாதங்கள் நடந்துள்ளது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நானே முதல்வர் வேட்பாளர்; இந்த ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வர் என ஆணித்தரமாக முதலில் பேசினார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்-க்கு ஈபிஎஸ் நேரடி பதில்

ஓபிஎஸ்-க்கு ஈபிஎஸ் நேரடி பதில்

இதற்கு பதில் தந்த ஈபிஎஸ், நம்ம 2 பேரையும் முதல்வராக்கியது சசிகலாதான். அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. மறந்துவிடாதீங்க என நேரடியாக ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இருந்த போதும் ஜெயலலிதாவின் சாய்ஸ் என்று பார்த்தால் ஓபிஎஸ்தானே.. அவரைத்தானே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கனும் என அவரது ஆதரவாளர்கள் தர்மநியாயம் பேசினர்.

ஈபிஎஸ் அணி கேள்விகள்

ஈபிஎஸ் அணி கேள்விகள்

இந்த தர்ம நியாயத்து வாதங்களுக்கு எடப்பாடி தரப்பு கிடுக்குப்பிடியான கேள்விகளையே பதிலாக வைத்தது. ஓபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என வைத்துக் கொள்வோம்.. சரி எந்த அடிப்படையில் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பது? தற்போதைய முதல்வர் எடப்பாடி சரியாக ஆட்சி செய்யவில்லை என்று சொல்லப் போகிறோமா? தற்போதைய முதல்வர் சரியான ஆட்சிதானே தருகிறார். இந்த ஆட்சி மோசம் என ஓபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து நாமே பிரகடனமும் செய்ய வேண்டுமா? என கேட்டிருக்கின்றனர்.

ஓபிஎஸ்க்கு எதிராக அமைச்சர்கள் இறுக்கம்

ஓபிஎஸ்க்கு எதிராக அமைச்சர்கள் இறுக்கம்

அதிமுகவுக்கு நல்ல பெயரைத் தரக் கூடிய வகையில்தானே ஈபிஎஸ் ஆட்சி நடத்துகிறார்; கட்சிக்கு எந்த வகையில் பங்கம் வரும் வகையில் ஈபிஎஸ் ஆட்சி நடக்கிறது? அப்படி ஏதாவது காரணங்கள் இருந்தால் அதை பட்டியல் போட்டு கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் தரலாம். எதுவுமே இல்லாமல் திடீரென என்னையே முதல்வர் வேட்பாளர் என அறிவிக்க வேண்டும் என அடம்பிடிப்பது சரியான அணுகுமுறையே இல்லை என எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் பலரும் இறுக்கத்துடன் பேசி இருக்கின்றனர்.

வரும்..ஆனா வராது?

வரும்..ஆனா வராது?

இருந்தபோதும் ஓபிஎஸ் தரப்பு இம்மியளவு கூட இறங்கிப் போக தயாராக இல்லை என்பதை இன்றைய கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதனால் அக்டோபர் 7-ந் தேதிக்குள் இருதரப்பும் சமாதானமாக பேசி ஒரு முடிவுக்கு வந்து முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவார்களா? அல்லது வேறு ஏதேனும் கலாட்டா நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் செயற்குழு உறுப்பினர்கள்

English summary
Sources said that in AIADMK, EPS Camp strongly opposed to OPS as CM Candidate for the Assembly Elections 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X