சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் எளிமையானவன்... எங்கள் மடியில் கனமில்லை - அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேச்சு

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று கூடுகிறது: வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறுகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: நான் சாதாரண குக்கிராமத்தில் இருந்து வந்தவன். என் உயிர் மூச்சு உள்ளவரை அதிமுக என் குருதியில் கலந்திருக்கும் என்று முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எங்கள் மடியில் கனமில்லை வழியில் எங்களுக்கு பயமில்லை என்றும் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற ஒவ்வொரு தொண்டர்களும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திட்டம் போட்டு தேர்தல் வியூகம் வகுத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம்.. 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

    Newest First Oldest First
    3:10 PM, 9 Jan

    எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்களின் மகத்தான ஆதரவை சிந்தாமல் சிதறாமல் வாக்குகளாக மாற்ற வேண்டும். அதிமுக ஒரு எஃகுக் கோட்டை அதை யாரும் அசைக்க முடியாது. எங்கோ ஒரு மூளையில் இருந்த நம்மை இங்கு வைத்து அமர வைத்தது ஜெயலலிதா. அதிமுகவிற்கும் ஜெயலலிதாவிற்கும் நன்றிக்கடன் ஆற்ற வேண்டும்
    3:08 PM, 9 Jan

    நாம் மாளிகையில் இருக்கவில்லை மக்களோடு மக்களாக இருக்கிறோம் - ஓபிஎஸ். தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக மட்டுமே. நம்மை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. சாதாரண தொண்டர்களால் வலுவாக உருவாகியுள்ள இயக்கம் அதிமுக. அதிமுக தொண்டர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்ற நல்ல பெயர் உள்ளது
    3:07 PM, 9 Jan

    2021ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய புரட்சி உருவாகும் - ஓபிஎஸ். அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு. கொரோனாவை விட மோசமான வைரஸ் ஆக திமுக திகழ்கிறது. திமுகவை ஒரேடியாக அரசியலை விட்டு விரட்ட வேண்டும். மக்களின் மகத்தான ஆதரவோடு 3வது முறையாக ஆட்சி பீடத்தை ஏற்கப்போகிறது. அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதல்வர் ஆக முடியு
    3:04 PM, 9 Jan

    நம்மை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது- ஓபிஎஸ். சாதாரண தொண்டர்களால் வலுவாக உருவாகியுள்ள இயக்கம் அதிமுக. அதிமுக தொண்டர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்ற நல்ல பெயர் உள்ளது.
    3:03 PM, 9 Jan

    நாம் மாளிகையில் இருக்கவில்லை மக்களோடு மக்களாக இருக்கிறோம் - ஓபிஎஸ். தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக மட்டுமே.
    3:03 PM, 9 Jan

    திமுகவை ஒரேடியாக அரசியலை விட்டு விரட்ட வேண்டும். மக்களின் மகத்தான ஆதரவோடு 3வது முறையாக ஆட்சி பீடத்தை ஏற்கப்போகிறது. அதிமுகவை எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதல்வர் ஆக முடியும் .
    3:03 PM, 9 Jan

    2021ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய புரட்சி உருவாகும் - ஓபிஎஸ். அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு. கொரோனாவை விட மோசமான வைரஸ் ஆக திமுக திகழ்கிறது.
    2:36 PM, 9 Jan

    எங்கள் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை - எடப்பாடி பழனிச்சாமி. எங்கு வேண்டுமானாலும் வருகிறோம் மேடை போட்டு பேசலாம். கட்சி மீது களங்கம் கற்பிக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார். ஆளுநரிடம் பொய்யான தகவலை தருகின்றனர் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    2:26 PM, 9 Jan

    என் இறுதி மூச்சு உள்ளவரை அதிமுக என் ரத்தத்தில் கலந்திருக்கும். 100 சதவிகிதம் அதிமுகவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
    2:26 PM, 9 Jan

    அதிமுக என்பது எம்ஜிஆர் கண்ட இயக்கம். ஜெயலலிதாவினால் கட்டுக்கோப்பாக உருவாக்கப்பட்ட போர்ப்படை அதிமுக. உண்மையான விசுவாசத்தை தவிர வேறொன்றும் என்னிடம் இல்லை.
    2:24 PM, 9 Jan

    குக்கிராமத்தில் இருந்து வந்த எளிய மனிதன் நான் - பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. என் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன். கழகமே எனது குருதி என ஓடிக்கொண்டிருக்கிறது. இது வரை பெற்ற அனுபவங்களைக் கொண்டு இனி வரும் காலங்களிலும் நான் தொண்டாற்றுவேன்.
    1:58 PM, 9 Jan

    அதிமுகவில் ஸ்லீப்பர் செல் என்று யாரும் கிடையாது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு மட்டுமே போட்டி தேசிய கட்சிகள் பொருட்டே அல்ல. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி பேச்சு.
    1:57 PM, 9 Jan

    ஜெயிலில் இருந்து சிலர் வெளியே வந்தாலும் எதுவும் நடக்காது - கே.பி முனுசாமி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என்று அதிமுக பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி பேச்சு. அதிமுக , திமுக முதுகில் ஏறித்தான் தேசிய கட்சிகள் பயணம் செய்ய முடியும்.
    12:54 PM, 9 Jan

    11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவிற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு வீர வாள் பரிசளிக்கப்பட்டது.
    12:07 PM, 9 Jan

    தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் திறந்த அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.
    12:07 PM, 9 Jan

    தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20% இட ஒதுக்கீடு முறைப்படுத்திய முதல்வருக்கு பாராட்டு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் மு.க ஸ்டாலினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
    12:02 PM, 9 Jan

    கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்த முதல்வர், மத்திய அரசுக்கு நன்றி. அதிமுக பொதுக்குழுவில் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    12:02 PM, 9 Jan

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை உலகப்புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு பாராட்டு
    12:00 PM, 9 Jan

    அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.
    11:55 AM, 9 Jan

    உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம். உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    11:44 AM, 9 Jan

    மருது சகோதரர்கள் போல இபிஎஸ், ஒபிஎஸ் இணைந்து வெற்றி பெறுவார்கள் - பா. வளர்மதி. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக வெற்றி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள்.
    11:44 AM, 9 Jan

    அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் பா. வளர்மதி, பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு. ராமர் லட்சுமணர்கள் போல இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர் என பா. வளர்மதி பேச்சு.
    11:28 AM, 9 Jan

    பொதுக்குழு கூட்டத்தில் எம்.ஜிஆர் ஜெயலலிதா படங்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மலர் தூவி மரியாதை. பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசி வருகிறார்.
    11:17 AM, 9 Jan

    பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மண்டபத்திற்கு வருகை தந்தார். அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. பூங்கொத்து கொடுத்து முதல்வர் பழனிச்சாமிக்கு வரவேற்பு.
    11:06 AM, 9 Jan

    அதிமுக நிர்வாகிகளை, அமைச்சர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளனர். முதல்வர், துணைமுதல்வருக்காக நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.
    11:06 AM, 9 Jan

    அதிமுக பொதுக்குழு செயற்குழு சற்று நேரத்தில் கூடுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்,இபிஎஸ் வானகரத்திற்கு கிளம்பினர் .
    10:44 AM, 9 Jan

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தனது இல்லத்தில் இருந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் மண்டபத்திற்கு கிளம்பினார். முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
    10:18 AM, 9 Jan

    அதிமுக பொதுக் குழு, செயற்குழு தொடங்குவதில் தாமதம். கொரோனா இல்லை என சான்றிதழுடன் வருவோருக்கே அனுமதி. பொதுக் குழு, செயற்குழு முடிந்தவுடன் அதிமுக பொறுப்பாளர்களுடன் ஆலோசனை.
    9:08 AM, 9 Jan

    சனிக்கிழமை காலையில் 9 மணி முதல் 10.30 மணிவரை ராகுகாலம் உள்ளது. காலை 11 மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது .
    9:08 AM, 9 Jan

    அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட காரணம் வெளியானது. நல்ல நேரம் பார்த்து கூட்டத்தை தொடங்க ஓபிஎஸ், இபிஎஸ் திட்டம்.
    READ MORE

    AIADMK General Committee and Executive Committee meet in a turbulent political environment - what resolutions
    English summary
    AIADMK Executive Committee and General body meeting is being held today at Vanakaram, Chennai under the chairmanship of E. Madhusudhanan. A large number of policemen have been deployed in the hall area where the general body and executive committee meeting to be held.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X