சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு ஓவர் எதிர்ப்பார்ப்பு... இப்படி சப்புன்னு போச்சே

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 16 தீர்மானங்களில் பல தீர்மானங்கள் அரசை பாராட்டும் விதமாகவே உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்த முதல்வர், மத்திய அரசுக்கு அதிமுக பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டணிக்கட்சி, தொகுதி பங்கீடு முடிவு செய்ய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஏற்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீர்மானம் இடம்பெறாதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK general council meeting EPS and OPS take 16 resolutions

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

ஜெயலலிதாவின் தியாகத்தையும், உழைப்பையும் போற்றும் வண்ணம் அமைக்கப்பட்டு வரும் நினைவிடத்தை, உலகப் புகழ்பெற்றதாய் உருவாக்கி திறந்து வைக்க இருக்கும் கழக அரசுக்கு நன்றியும், பாராட்டும்.

Recommended Video

    சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம்.. 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

    அதிமுகவின் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அறிவித்துள்ளதை ஏகமனதாக ஏற்கிறோம். மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூட கடுமையாக உழைப்போம்.

    கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு நன்றி.

    இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமைகளை வழங்கவும், அதிகார பரவலுக்கு அடித்தளமிட, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுமான, மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்.

    தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீத இட ஒதுக்கீடு முறைப்படுத்திய முதல்வருக்கு பாராட்டு.
    தமிழ்நாடு முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக் எனும் மருத்துவ மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கும் கழக அரசுக்குப் பாராட்டு.

    தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்றிட, சுழல்நிதி ஏற்படுத்தி இருக்கும் கழக அரசுக்குப் பாராட்டு.

    தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்பும், 2,500 ரூபாய் ரொக்கமும் வழங்கும் கழக அரசுக்குப் பாராட்டு.

    தமிழக அரசை விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம். தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம். உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, வேலை வாய்ப்பை அதிகரித்த தமிழக அரசுக்கு பாராட்டு

    புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு. நகர்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி. டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சட்டசபைத் தேர்தல் நேரம் என்பதால் இந்த பொதுக்குழு கூட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்கும் கட்சியினருடன்தான் சட்டசபைத் தேர்தல் கூட்டணி அமைப்போம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு ராசியான எண் வரும் வகையில 16 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

    நிர்வாகிகள் அனைவரும் முதல்வர், துணைமுதல்வர் ஆகியோருக்கு வீர வாளும், செங்கோலும் பரிசளித்தனர். பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் துணை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சியுரை நிகழ்த்தினார்.

    English summary
    AIADMK General council meeting which was held on Saturday several issues were discussed. A total of 16 resolutions were passed during the meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X