கடுகடுப்பான முகம் .. அடுத்தடுத்து அமராத எடப்பாடி - ஓபிஎஸ்.. தொடங்கியது அதிமுக பொதுக்குழு
சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தற்போது சென்னை வானகரத்தில் நடந்து வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் அருகருகே அமராமல் நடுவே வேறு ஒரு இருக்கை போடப்பட்டு அதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அமர வைக்கப்பட்டார்.
பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட முடியாது. பொதுக்குழுவை நடத்த நேற்று உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்தது.
சென்னை உயர் நீதிமன்ற தடையால் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட முடியாது.
2.41 டூ 4.50! விடிய விடிய ஓபிஎஸ் போராட்டம்! கருணாநிதி வழக்கிலும் இப்படி நடந்தது இல்ல! வென்றது எப்படி

ஓபிஎஸ் வாதம்
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழு இதனால் தீர்மானம் நிறைவேற்ற கூடாது. பொதுக்குழு இப்படி தீர்மானம் நிறைவேற்றுவது சட்டப்படி தவறு. நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதம் வைத்தது. இதற்கு பதில் அளித்த இபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

தனித்தீர்மானம்
தனித்தீர்மானம் கொண்டு வர தடை விதிக்க முடியாது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பப்படியே கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும். அதன்படியே தீர்மானங்கள், முடிவுகள் எடுக்கப்படும். கட்சி விதிகளில் மாற்றம் செய்வது, திருத்தம் செய்வது போன்றவை நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். அது கட்சி முடிவை பொறுத்தது, என்று வாதம் வைத்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
நேற்று முதலில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த பொதுக்குழுவிற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் டிவிஷனல் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டில், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம் அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது, என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செயற்குழு, பொதுக்குழு
இந்த நிலையில் தற்போது வானகரத்தில் உள்ள மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு 2000-ம் போலீசார் உள்ளே, வெளியே பாதுகாப்பு செய்து வருகிறார்கள். தற்போது இபிஎஸ் தரப்பு தொண்டர்கள் அதிக அளவில் மண்டபத்திற்கு வர தொடங்கி உள்ளனர். ஓபிஎஸ் தரப்பு தொண்டர்கள் கொஞ்சம் குறைவாகவே இதுவரை வர தொடங்கி உள்ளனர்.

பரபரப்பான சூழ்நிலை
இந்த நிகழ்விற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க பல பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வானகரத்தில் குவிந்து வருகிறார்கள். தீர்ப்பு சாதகமாக வந்த நிலையில் பொதுக்குழுவிற்கு ஓ பன்னீர்செல்வம் வருவார் என்று நேற்று இரவே உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பொதுக்குழு நடக்க பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.

கூட்டம்
இன்று பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ பன்னீர்செல்வம் வந்ததும் அவர் கடுமையாக அவமதிக்கப்பட்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகவும் குறைவாகவே அங்கு குழுமி இருந்தனர். ஓ பன்னீர்செல்வம் உள்ள வந்ததும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை எதிர்த்தனர்.அவரின் காரை உள்ளே நிறுத்த விடவில்லை. நீ அதிமுக கிடையாது என்று கூறி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை நோக்கி கத்தினர். பின்னர் மேடைக்கு ஏறிய பின் ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் அருகருகே அமராமல் நடுவே வேறு ஒரு இருக்கை போடப்பட்டு அதில் வைத்தியலிங்கம் அமர வைக்கப்பட்டார். இருவரின் முகமும் கடுமையாக காணப்பட்டது.