சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவின் வாக்கு சதவீதம் இப்படி 'பொளபொளவென' சரிஞ்சு போச்சே!

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள அதிமுக தாம் கட்டிக் காத்து வந்த வாக்கு சதவீதத்தின் பெரும்பகுதியை இழந்துள்ளது. தற்போதைய நிலையில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 18.57 ஆக உள்ளது.

2014 லோக்சபா தேர்தலில் அத்தனை இடங்களையும் கைப்பற்றி சரித்திரம் படைத்தது அதிமுக. அத்தேர்தலில் 44.3% வாக்குகளைப் பெற்றது அதிமுக. முந்தைய லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில் 21.4% அதிகம் இது.

வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு!வருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு!

தோற்றாலும் வாக்குசதவீதம் கெட்டி

தோற்றாலும் வாக்குசதவீதம் கெட்டி

போட்டியிட்ட திமுக 18 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது திமுக. ஆனாலும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 26.8% இருந்தது. முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில் 0.7% மட்டுமே குறைவு.

சரிந்தது வாக்கு சதவீதம்

சரிந்தது வாக்கு சதவீதம்

இம்முறை நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதேநேரத்தில் அந்த கட்சியின் வாக்கு சதவீதம் படுமோசமாக சரிந்தும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 18.57% வாக்குகள்தான் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.

மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை.. ராகுல் காந்தி பேட்டிமக்கள் கொடுத்த தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை.. ராகுல் காந்தி பேட்டி

திமுகவுக்கு 7% வாக்குகள் அதிகம்

திமுகவுக்கு 7% வாக்குகள் அதிகம்

திமுக சுமார் 7% வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. அதாவது திமுகவின் வாக்கு சதவீதம் 33.83%. இடதுசாரி கட்சிகளில் சிபிஐ- 2.50%; சி.பி.எம். 2.59% வாக்குகளைப் பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் இரண்டு இடதுசாரிகளும் தலா 0.5% வாக்குகளைத்தான் பெற்றிருந்தனர்.

காங்கிரஸுக்கு 8% கூடுதல்

காங்கிரஸுக்கு 8% கூடுதல்

காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 12.33% வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸுக்கு 2014 லோக்சபா தேர்தலில் 4.3% வாக்குகள் கிடைத்தன.

தமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'தமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'

பாமகவுக்கு அதிகரிப்பு

பாமகவுக்கு அதிகரிப்பு

பாமக 5.6% வாக்குகளைப் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பாமக 4.4% வாக்குகளைத்தான் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
AIADMK has secured only 18.57% votes in Loksabha Elections. In 2014 Assembly elections, AIADMK got 44.3% votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X