சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடி அரசு நீடிக்கும் என மறைமுகமாக சொல்கிறாரா மு.க.ஸ்டாலின்? குதூகலிக்கும் அதிமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் பாஜகவிற்கு, திமுக ஆதரவு அளிக்குமா?- வீடியோ

    சென்னை: மேட்டூர் அணை திறப்பு தொடர்பான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அதிமுகவினரை துள்ளி குதிக்க வைத்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து நீடிக்கும் என மறைமுக மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளதாக கொண்டாடுகின்றனர் அதிமுகவினர்.

    லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் செய்தார். ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவருமே மே 23-ந் தேதியுடன் எடப்பாடி அரசு வீட்டுக்குப் போய்விடும் என்றுதான் பிரசாரம் செய்தனர்.

    ஜாலியன்வாலா பாக்கில் இறந்தவர்கள் தேசபற்றாளர்கள்.. தூத்துக்குடியில் இறந்தவர்கள் தேசதுரோகிகளா? ஜாலியன்வாலா பாக்கில் இறந்தவர்கள் தேசபற்றாளர்கள்.. தூத்துக்குடியில் இறந்தவர்கள் தேசதுரோகிகளா?

    அதிமுக அரசு நீடிக்குமா?

    அதிமுக அரசு நீடிக்குமா?

    தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அதிமுக அரசு நீடிக்குமா? கவிழுமா? என்கிற விவாதங்களும் நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டாலின் அளித்த பேட்டியும் அவர் வெளியிட்ட அறிக்கையும் சர்ச்சையாகி உள்ளது.

    ஸ்டாலின் பேட்டியால் சர்ச்சை

    ஸ்டாலின் பேட்டியால் சர்ச்சை

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், புதிய மத்திய அரசில் திமுக பங்கேற்குமா? என்ற கேள்விக்கு திட்டவட்டமான பதிலை சொல்லாமல் 23-ந் தேதியன்று விளக்கம் தருகிறேன் என்றார். இதனால் பாஜக அரசுக்கு திமுக ஆதரவு தருமோ என்கிற கேள்வி எழுந்தது. இதை அதிமுகவின் நமது அம்மா நாளேடும் சுட்டிக்காட்டி கட்டுரை வெளியிட்டது.

    மேட்டூர் அணை- ஸ்டாலின் அறிக்கை

    மேட்டூர் அணை- ஸ்டாலின் அறிக்கை

    இதனையடுத்து மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்திருந்தார் ஸ்டாலின். அதாவது மே 23-ந் தேதியுடன் வீட்டுக்குப் போகும் எடப்பாடி அரசு என்று பேசிய ஸ்டாலின்தான் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

    குதூகலிக்கும் அதிமுக

    குதூகலிக்கும் அதிமுக

    இதை சுட்டிக்காட்டி, தேர்தலுக்காக மட்டுமே எடப்பாடி அரசு வீட்டுக்குப் போகும் என ஸ்டாலின் பேசியிருக்கிறார். அவருக்கே நன்றாக தெரியும் அதிமுக அரசு கவிழாது என்பது. அதனால்தான் இப்படி ஒரு கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வைத்திருக்கிறார் என மகிழ்கின்றனர் அதிமுகவினர்.

    English summary
    AIADMk Senior leaders hope on Cheif Minister Edappaadi Palanisamy Govt will survive afte loksabha Election results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X