கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார்கள்.. அதிமுக பலவீனமாகிவிட்டது.. டிடிவி தினகரன் விமர்சனம்
சென்னை: அதிமுக மிகவும் பலவீனமாகிவிட்டது. கூட்டணிக்கு கட்சிகளை கூவி கூவி அழைக்கும் நிலைக்கு போய்விட்டது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். விஜய்யை கூட்டணிக்கு அழைத்துவிடலாம் என நினைத்தனர். ஆனால் அவர் தெளிவான நிலைப்பாட்டை கூறியதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர் என்றும் கூறினார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுக பலவீனமாக உள்ளது என்றும், கொடநாடு வழக்கில் அவர்களை சம்பந்தப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை என்றும், பழனிசாமி ஆட்சியில் இருந்த போது கொடநாட்டில் தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வந்ததாகத்தான் கூறினேன் என்றும் பேசினார். டிடிவி தினகரன் கூறியதாவது:-

விஜய் தெளிவான நிலைப்பாடு
விஜய்யை வா.. வா.. என்று கூவி பார்த்தார்கள்.. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் திமுக தவெகவை அழித்துவிடும், தவெகவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தி பார்த்தார்கள். பவன் கல்யாண், சிரஞ்சிவீயை சொல்லியும் பயமுறுத்தி பார்த்தார்கள். ஆனால் விஜய் பொறுமையாக இருந்து பதில் அளித்தார்.
விஜய் தெளிவான தனது நிலைப்பாட்டை அறிவித்த பிறகு ச்சீ..ச்சீ.. இந்த பழம் புளிக்கும் என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்று இப்படி பேசுகிறார்கள். உண்மை என்றைக்கும் கசக்கத்தான் செய்யும். துரோகம் என்றைக்கும் அதன் வேலையை காட்டும். 1972 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்த பிறகு தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்தார்.
33 ஆண்டுகள் ஆட்சி
இதேபோன்று ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பு ஏற்றப்போதும் தொடர்ந்து அவர் ஆட்சி செய்தார். 1991 ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா ஆட்சி செய்தார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த இயக்கம் தான் அதிமுக. தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மற்றவர்கள் தேடி வந்து பார்த்து இருப்போம்.. கூட்டணி கட்சிகள் அவர்களை தேடி வந்தார்கள்.
அதிமுக பலவீனமாகிவிட்டது
ஆனால் இன்றைக்கு பார்த்தோம் என்றால் இவர்கள் கூட்டணிக்கு கட்சிகளை கூவி கூவி அழைக்கிறார்கள். இவர்கள் என்னமோ கடை வைத்து இருக்கின்ற மாதிரி, ராயப்பேட்டை அலுவலகம் முன்பு அம்மா, எம்ஜிஆர் படத்தை காண்பித்து கூட்டணிக்கு வாங்க வாங்க என்ற கூவி அழைத்து வருவது போல் செய்கிறார்கள். இது எல்லாம் அதிமுக பலவீனமாகிவிட்டது என்பதற்கு உதாரணம். இதை சொன்னால் என் மீது கோபம் கொள்கிறார்கள்.
அன்றைக்கு கூட நான் சொன்னது, கொடநாடு வழக்கில் அவர்களை சம்பந்தப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. கொடநாடில், அங்கே நகைகள், பணம் எதும் இருக்காது என தெரிந்தும், அங்கே கொலை, தற்கொலை என தொடர் கொலைகள் எல்லாம் நடந்திருக்கும். பழனிசாமி ஆட்சியில் இருந்த போது தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதை தான் சொன்னோம்.
பச்சை கலர் ஃபைல்
அரசு ரெக்கார்டை இவர் அழித்துவிட்டார் என பல யூடியூப்களில் போட்டனர். அரசு ரெக்கார்டு எல்லாம் கிடையாது. கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் எல்லாருமே யாரு.. அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அம்மா அவர்கள் விசாரிப்பார்கள். அது அந்த பச்சை கலர் பைலில் இருக்கும் என்று சொன்னேன்.. உடனே இவர்கள் அரசு ரெக்கார்டு.. அம்மா இருக்கும் போது பார்த்தாரா.. அம்மா மறைவுக்கு பிறகு பார்த்தாரா என பல்வேறு விதமாக செய்திகளை பரப்பிவிட்டனர். இது சட்டத்துக்கு விரோதமானது என்று.
அரசு ரெக்கார்டு என்றால் இன்னொரு காப்பி எப்படியும் அரசிடம் இருக்கும். ஆனால் இது அது இல்லை. நாங்க இதையெல்லாம் போய் கிழிக்கவில்லை. அம்மா அவர்களுக்கு கட்சியில் இருக்கின்ற நிர்வாகிகள் மீது, கட்சியில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அந்த பச்சை கலர் பைலில் இருக்கும். பிரைவேட்டாக வரும் அந்த ரிப்போர்கள் தான் அங்கு இருக்கும். சின்னம்மா சொன்னது எல்லாம், அதிமுக ஓரணியில் இணையவேண்டும் என்பது தான்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்











Click it and Unblock the Notifications