சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாச்சு.. "தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை.." பிரேமலதா விஜயகாந்த் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டணி கட்சியான அதிமுக இதுவரை தேமுதிகவை அழைக்கவில்லை என, அக்கட்சிப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், பொங்கல், ரம்ஜான் விழாக்களை தேமுதிக மதநல்லிணக்க அடிப்படையில் உதவிப் பணிகளை செய்து வருகிறோம்.

கிறிஸ்து பிறந்த இந்த நல்ல நாளில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. சட்டசபை தேர்தலில் தேமுதிக எங்கு இருக்கிறதோ அங்குதான் வெற்றி நிச்சம். தேமுதிக தேர்தலுக்கு தயாராக இருக்கிறது.

எலிசபெத்தும் நீதான்.. சுனிதாவும் நீதானா.. பெண் குரல் பேச்சு.. 40 லட்சத்தை இழந்த சென்னை பிசினஸ்மேன் எலிசபெத்தும் நீதான்.. சுனிதாவும் நீதானா.. பெண் குரல் பேச்சு.. 40 லட்சத்தை இழந்த சென்னை பிசினஸ்மேன்

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். 2021ம் ஆண்டு மக்களுக்காக பணியாற்றும் மகத்தான வாய்ப்பு தேமுதிக மற்றும் எங்கள் கூட்டணிக்கு அமையும்.

கருப்பு எம்ஜிஆர்

கருப்பு எம்ஜிஆர்

விஜயகாந்த்துக்கு கருப்பு எம்ஜிஆர் என பட்டம் கொடுத்தது மக்கள்தான். எம்ஜிஆரை குருவாக ஏற்றவர் விஜயகாந்த். அரசியலுக்கு வருவோர் எம்ஜிஆர் பெயரை சொல்கிறார்கள். எப்போதுமே விஜயகாந்த் தன்னை கருப்பு எம்ஜிஆர் சொன்னது இல்லை. எம்ஜிஆர் போல விஜயகாந்த் மக்களுக்கு உதவுபவர் என்பதால் மக்களே சூட்டிய பட்டம்.

உரிமை கொண்டாடுவோர் செய்தது என்ன?

உரிமை கொண்டாடுவோர் செய்தது என்ன?

நடிகராக இருந்த காலம் முதல் இன்றுவரை எம்ஜிஆரை குருவாக ஏற்றவர் விஜயகாந்த். எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு 25 வருடங்களாக உதவி செய்துவருவது விஜயகாந்த் மட்டுமே. எம்ஜிஆரை உரிமை கொண்டாடுவோர் இதுவரை என்ன செய்தார்கள். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

அதிமுக-தேமுதிக

அதிமுக-தேமுதிக

அதிமுக கூட்டணியில், பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன. அதிமுக கூட்டணி சார்பில், முதல்வர் எடப்பாடியார் தேர்தல் பிரச்சாரத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார். ஆனால் கூட்டணி கட்சிகள் இவரோடு இதுவரை பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. லோக்சபா தேர்தல் முதல், அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
AIADMK has not yet invited DMDK to the assembly election campaign, party treasurer Premalatha Vijayakanth said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X