சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊடகங்களில் இனி தாராளமா பேசலாம்.. கருத்து தெரிவிக்கலாம்.. தடையை நீக்கியது அதிமுக!

அதிமுக செய்தி தொடர்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஊடகங்களில் செய்தி தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க கூடாது என்ற தடையை அதிமுக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 1ம் தேதி முதல் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் தங்கள் பணியை தொடரலாம் என்று ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என எம்எல்ஏக்கள் சிலர் கருத்து தெரிவிக்க போய், அது பெரிய விவகாரமாக உருவெடுத்தது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு வேண்டாம்.. என்னென்ன விபரீதங்கள் வரும் தெரியுமா.. வைகோ எச்சரிக்கை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு வேண்டாம்.. என்னென்ன விபரீதங்கள் வரும் தெரியுமா.. வைகோ எச்சரிக்கை

ஆலோசனை

ஆலோசனை

இதையடுத்து, அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அந்த கூட்டத்தில், ஒற்றை தலைமை தேவை பற்றி ஏதாவது பேசுவார்கள், அது சம்பந்தமான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

ஆனால், அதைபற்றி எதுவுமே சொல்லாமல், அதிமுக செய்தி தொடர்பாளர்கள் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி தலைமை சொல்லிவிட்டது. மறு அறிவிப்பு வரும்வரை யாரும் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது என்றும், அதையும் மீறி ஊடகங்களிடம் நிர்வாகிகள் பேசினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் கட்சி தலைமை எச்சரித்திருந்தது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் இந்த எச்சரிக்கைக்கு அரசியல் விமர்சகர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய அறிவிப்பினை அதிமுக வாபஸ் பெற்றுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் தங்கள் பணியை தொடரலாம் என்று ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி ஒரு அறிக்கை மூலம் அறிவித்துள்ளனர்.

16 பேர்

16 பேர்

மேலும் அந்த அறிக்கையில், பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், நிர்மலா பெரியசாமி, கோவை சத்யா உட்பட 16 பேர் அதிமுகவின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்தளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The ban on AIADMK spokespersons from speaking in the media has now been lifted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X