சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"செம சான்ஸ்".. திமுக மட்டும்தான் "இதை" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. "அம்மா"தான் இருக்காங்களே

விவசாயிகளின் ஆதரவு ஓட்டுக்களை அதிமுக பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக தாமதம் செய்ய செய்ய ஒவ்வொரு விவசாயியின் வருத்தமும், கோபமும், அப்படியே திமுக பக்கம் ஆதரவு அலையாக மாறிக் கொண்டிருப்பதாக விவசாயிகள் தரப்பின் நாடி பிடித்துப் பார்ப்பவர்கள் சொல்கிறார்கள். இந்த இடத்தில் ஸ்கோர் செய்ய சூப்பர் அம்சம் இருந்தாலும் அதிமுக அதை முழுமையாகச் செய்யவில்லையே என்ற ஏமாற்றமும் எழுகிறது.

நாம் இப்படியே இருந்தால், விவசாயிகளிடமிருந்து விலகிச் சென்று விடும் அதிமுக என்பது அடிமட்டத் தொண்டர்களின் வருத்தமாக இருக்கிறது. காரணம், விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக அதிரடி காட்டாமல் உள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.

இத்தனைக்கும் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தி கெளரவித்தவர்கள் விவசாயிகள். காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசு கெஜட்டில் வெளியிட வைத்தவர் ஜெயலலிதாதான். அதை அவர்கள் மறக்கவில்லை. ஜெயலலிதாவைப் போல விவசாயிகளுக்காக பாடுபட்டவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. குறிப்பாக காவிரி விவகாரம் மட்டுமல்லாமல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் திடமாக செயல்பட்டவர் ஜெயலலிதாதான்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

இதற்கு நேர் மாறாக விவசாயிகள் தொடர்பான எல்லாப் போராட்டத்தையும் திமுக உடனே வந்து ஆதரிக்கிறது. விடாமல் அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறது. இதோ இன்று நடக்கப் போகும் டிராக்டர் போராட்டத்தைக் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரித்து நேற்று இரவே அறிக்கையும் அனுப்பி விட்டார். இதை விட வேகமாக எந்தத் தலைவராலும் செயல்பட முடியாது என்று சொல்லும் அளவுக்கு திமுக வேகமாக இருக்கிறது.

 ஆதரவு

ஆதரவு

அதிமுகவுக்கு இன்னும் காலம் போய் விடவில்லை. தமிழக விவசாயிகளின் கவனத்தை முழுவதுமாக திருப்பும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பாஜகவை அது கவனத்தில் கொள்ளவே கூடாது. அப்படிச் செய்தால் டெல்டா மாவட்டங்களில் திமுகவுக்கு கடும் போட்டியை அதிமுகவால் கொடுக்க முடியும்.

ஆதரவு

ஆதரவு

அதிமுகவுக்கு இன்னும் காலம் போய் விடவில்லை. தமிழக விவசாயிகளின் கவனத்தை முழுவதுமாக திருப்பும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பாஜகவை அது கவனத்தில் கொள்ளவே கூடாது. அப்படிச் செய்தால் டெல்டா மாவட்டங்களில் திமுகவுக்கு கடும் போட்டியை அதிமுகவால் கொடுக்க முடியும்.

 திமுக

திமுக

காவிரி வழக்கில் ஜெயலலிதா செயல்பட்ட விதம், நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வைத்த விதம் இது எல்லாவற்றையும் விளக்கும் வகையில் தீவிரமாக தலைவர்களை களம் இறக்கினால்தான் விவசாயிகள் முழுவதுமாக திமுக பக்கம் போவதைத் தடுக்க ஒரே வழி என்று நடுநிலையாளர்கள் சொல்கிறார்கள். அதிமுக இதைச் செய்யுமா.

English summary
AIADMK is also forced to get the votes of the farmers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X