சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சி நம்ம கிட்டதான் இருக்கும்.. அமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக!- வீடியோ

    சென்னை: இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகும் ஆட்சி நம்மிடம்தான் இருக்கும். அதில் மாற்றமே இல்லை என்ற அதீத நம்பிக்கையில் உள்ளனர் அதிமுகவினர்.

    இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் உள்ளதாம்.

    இந்நிலையில் ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சை நச்சரித்து வருகிறார்களாம். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    இன்னும் பிள்ளையே பிறக்கலே.. அதுக்குள்ள பேர் வச்சாச்சா.. சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு!இன்னும் பிள்ளையே பிறக்கலே.. அதுக்குள்ள பேர் வச்சாச்சா.. சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு!

    பிறகு பார்க்கலாம்

    பிறகு பார்க்கலாம்

    நெருக்கடி நிலையில் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதால் யாரிடமாவது அமைச்சர் பதவியை பறித்து அது ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடப் போகிறது என யோசனை செய்கிறார்களாம்.

    புதியவர்களை சேர்க்கலாமே

    புதியவர்களை சேர்க்கலாமே

    பதவியை பறித்தால் தானே சிக்கல், புதிதாக 2 பேரை அமைச்சரவையில் சேர்த்தால் என்ன என ஆலோசிக்கப்படுகிறதாம். அந்தவகையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ.வாக உள்ள பரமசிவத்திற்கு அமைச்சர் பதவிக்கான ஜாக்பாட் அடித்தாலும் அடிக்குமாம்.

     டாக்டர் பரமசிவம்

    டாக்டர் பரமசிவம்

    கோஷ்டிகளில் சிக்காதது, மருத்துவர், இளம் வயது உள்ளிட்ட விவகாரங்கள் பரமசிவத்துக்கு ப்ளஸ் ஆக உள்ளதாம். தம்பிதுரை இவருக்காக பலத்த

    பரிந்துரை செய்துள்ளாராம்.

    முடிந்ததும் பார்க்கலாம்

    முடிந்ததும் பார்க்கலாம்

    ஆனால் தேர்தல் முடிவு வராமல் எதைப்பற்றியும் யோசிக்கும் முடிவில் இ.பி.எஸ். இல்லையாம். ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் திமுகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் அதிமுகவும் உள்ளதால் இரு கட்சிகளிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

    உற்சாகம்

    உற்சாகம்


    அதிமுக ஆரம்பத்திலிருந்தே நாடாளுமன்றத் தேர்தல் முடிவை விட இடைத் தேர்தல் முடிவைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறது. காரணம், இது சாதகமாக இருந்தால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்பதால். இந்த நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிமுகவினர் உற்சாகமாக இருப்பது எதிர்க்கட்சிகளிடையே கலக்கத்தை அதிகரித்துள்ளது.

    English summary
    ADMK leaders are awaiting for a major cabinet reshuffle once the election results are out.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X