சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி!

முதல்வருக்கு கட்சி சீனியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Competition for Chennai mayor post in aiadmk | மேயர் பதவிக்கு போட்டி ! தவிக்கும் அதிமுக தலைமை

    சென்னை: மேயர் பதவிகளுக்கு, யாருக்கு எதை வேணும்னாலும் ஒதுக்குங்க.. ஆனால் பாமகவுக்கு அந்த ஒரு மாநகராட்சியை மட்டும் தந்துடாதீங்க" என்று அதிமுக சீனியர்கள் தலைமையிடம் கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்.

    திமுகவுக்கு இணையாக உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் இப்போதைய ஒரே பிளானாக இருக்கிறது. இது சம்பந்தமான விவாதம் கூட நடந்தது. அப்போது சென்னை மாநகராட்சியை திரும்பவும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அதற்கான தேர்தல் பணியினை மும்முரமாக செய்ய வேண்டும் என்பதுமே சீரியஸ் டிஸ்கஷனாக இருந்தது.

    திமுகவுக்கு சமமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று எடப்பாடியார் விரும்புகிறார். இருந்தாலும் மேயர் பதவிக்கு ஏகப்பட்ட போட்டிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எம்பி தேர்தலில் சீட் கிடைக்காதவர்களும், எம்பி தேர்தலில் தோல்வியடைந்தவர்களும் சென்னை மேயர் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

    சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்! சிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? பின்னணி இதுதான்!

    வேலூர்

    வேலூர்

    நா.பாலகங்கா,வெங்கடேஷ் பாபு, ஜேசிபி. பிரபாகர், பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்பி ஜெயவர்தன் போன்றோர் மேயர் பதவியை கேட்டுள்ளனர். முதலில் கூட்டணி கட்சியை சமாளித்துவிட்டுதான், சொந்த கட்சி பற்றி கவனிக்க முடியும் என்று தெரிவித்து விட்டனராம். கூட்டணியை பொறுத்தவரை பாஜக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகளும் சென்னை, வேலூரை குறி வைக்கின்றன.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    நடந்து முடிந்த இடைத்தேர்தல் வெற்றி கிடைக்க பெரிதும் காரணமாக இருந்தது பாமகதான். மேலும், அந்த கட்சி தன்னுடைய செல்வாக்கை இன்னமும் இழக்கவில்லை என்பதும், பலமான அஸ்திவாரத்துடனேயே பயணித்து வருகிறது என்பதையும் நிரூபித்துள்ளது.

    பாமக

    பாமக

    அந்த வகையில், உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுகவிடம் பாமக நிறையவே டிமாண்ட் செய்ய வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் அதிமுக தலைமையிடம் ஒரேஒரு கோரிக்கையை அதிமுக சீனியர்கள் சொல்லி வருகிறார்களாம். அது "என்ன ஆனாலும் சரி, சேலத்தை மட்டும் பாமகவுக்கு தந்துடாதீங்க" என்பதுதானாம்.

    சேலம்

    சேலம்

    "எம்பி தேர்தலில் ஒரு சீட் தவிர மற்ற எல்லாவற்றிலும் கோட்டை விட்டுவிட்டோம். விட்டதை, இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு பதவிகளை பிடிக்க வேண்டும். இதில், சேலம், சென்னை மேயர் பதவிகளை மட்டும் கூட்டணிக்கு தந்துடாதீங்க.. குறிப்பாக, சேலத்தை தர வேணாம்.. உங்க சொந்த மாவட்டத்திலேயே எம்பி தேர்தலில் தோல்வி அடைந்ததால், இந்த முறை வெற்றி பெற்று, லோக்கலில் செல்வாக்கை அதிகப்படுத்திக்கணும்.

    8 வழிச்சாலை

    8 வழிச்சாலை

    கூட்டணியில் உள்ளதே என்று பாமகவுக்கு சேலத்தை தந்தால், நாளைக்கு பிளவு வந்தால் என்ன செய்வது? ஏற்கனவே 8 வழிச்சாலையில் நிலைப்பாடு ஒத்துவராமல் உள்ளது. சேலத்தை பாமகவுக்கு தந்தால் என்னாகும்? நாளைக்கு கூட்டணியை விட்டுவிலகிவிட்டால் என்ன செய்வது? அதனால் பாமகவுக்கு மட்டும் சேலம் ஒதுக்காமல் நாமளே போட்டியிடணும். அதேபோல, எந்த மேயர் பதவியை பிடிக்கிறோமோ இல்லையோ, சென்னை மேயர் பதவியையும் பிடித்தே ஆக வேண்டும்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    அது மட்டுமல்ல, நாம இப்ப ஆளும் கட்சியாக இருக்கோம். இப்ப இருக்கிற எம்எல்ஏக்களுக்கு சீட் தந்தது ஜெயலலிதாதான். அதனால, 2021-க்கு அப்பறம் நிலைமை எப்படி இருக்கும்னு தெரியாது. அந்த சமயத்துல அவங்களுக்கு சீட் தர முடியாத சூழல்கூட வரலாம். ஒருவேளை இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் போட்டியிட்டால், நிறைய பேர் எம்எல்ஏ சீட் கேட்பதில் இருந்து விலகலாம்.

    ஆலோசனைகள்

    ஆலோசனைகள்

    நம்ம கட்சியை சேர்ந்தவர்கள்தான் பதவிகளில் இருக்கணும். அதனால அதிருப்தியில இருக்கிறவங்களை கூப்பிட்டு சீட் தந்து சமாதானம் செய்துக்கறது கட்சியின் எதிர்காலத்துக்கு பலம்" என்று சொல்லி வருகிறார்களாம். எனினும், ஆலோசனைகளை முதல்வர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டு வருகிறாரே, தவிர இன்னும் எந்த முடிவும் உறுதியாக எடுக்கவில்லை.

    English summary
    aiadmk is preparing to meet the local body election and Party seniors have asked not to give the mayor of Chennai, Salem to the PMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X