சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ட்விஸ்ட்.. கனிமொழிக்கு தேங்க்ஸ் சொன்ன அதிமுக.. "அவர்" கனவு காண வேண்டியதுதான்.. நச் பதிலடி ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: கனிமொழி ஒன்னு சொன்னால், அதைவிட ஒருபடி மேலே போய் அசரடிக்கும் வகையில், திமுகவையே கிடுகிடுக்க வைத்துள்ளது அதிமுக தலைமை.. ட்விட்டரில் கனிமொழிக்கு அதிமுக நன்றி சொன்ன விவகாரம்தான் தமிழக அரசியலில் இப்போதைய ஹாட் டாப்பிக்!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிறைய அறிவிப்புகளை வெளியிட்டார்..

அதில் ஒன்றுதான் 12,110 கோடி தமிழக விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.. இப்படி ஒரு அறிவிப்பை தமிழக மக்கள் எதிர்பார்க்கவே இல்லை.

"அண்ணே, விடுங்க.. அவங்க இருக்காங்கள்ல".. வைகோவையே விக்கித்து போக வைத்த ஸ்டாலின்.. என்னாச்சு..!

எடப்பாடியார்

எடப்பாடியார்

எடப்பாடியார் இப்படி அறிவித்ததுமே அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.. அவை முடிந்ததும், எடப்பாடியாரை சூழ்ந்து கொண்டு வாழ்த்தும் பாராட்டும் சொன்னார்கள்.. இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் மட்டுமல்லாது, அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள்.

விவசாயிகள்

விவசாயிகள்

ஆனால், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கடன் தள்ளுபடியை திமுகதான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக சொல்லி இருந்தது.. ஸ்டாலின் இதுபோன்ற ஒரு உறுதிமொழியை ஏற்கனவே டெல்டா விவசாயிகளிடம் தெரிவித்திருந்தார். இதனை தான் எடப்பாடியார் நேற்று அறிவித்தார்.. உடனே "ஸ்டாலின் சொல்கிறார்.. எடப்படியார் செய்கிறார்" என்று சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களும் வெளியாகின.

அறிக்கை நாயகன்

அறிக்கை நாயகன்

இந்த சூழலில், திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் இதை மையமாக வைத்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதில், "அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி".. தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

கனிமொழி

கனிமொழி

கனிமொழியின் இந்த கருத்துக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது... இது தொடர்பான அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளது.. அதில், "அறிக்கை விடாமல் நாங்கள் அடிக்கல் நாயகனாக அனைத்து திட்டத்தையும் துவங்கி செயல்படுகிறோம் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி ! ஆம்.. கனவு காணும் உரிமை அனைவருக்கும் உண்டு. பல ஆண்டுகளாக முதல்வர் கனவு கண்டுகொண்டு தானே இருக்கிறார் மு.க.ஸ்டாலின். என்ன பயன்? கடைசிவரை கனவு மட்டுமே காண வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளது.

பரபரப்பு

கனிமொழியின் அந்த ட்வீட்டும், அதற்கு அதிமுகவின் பதிலும் பெரும் பரபரப்பை ட்விட்டரில் ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு இரண்டு கட்சியினரும் திரண்டு வந்து ஆதரவும், எதிர்ப்புமாக கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.. இதனால் அதிமுக ட்விட்டரே அல்லோலப்பட்டு கிடக்கிறது..!

English summary
AIADMK IT Wing reacts to DMK MP Kanimozhis tweet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X