சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது எப்.ஐ.ஆர்.. போலீஸ் நடவடிக்கை!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுபஸ்ரீ மீது பேனர் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி | Chennai Subashree Accident CCTV Video

    சென்னை: சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீயின் மரணம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. பள்ளிக்கரணையில் இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.

    கட் அவுட் முகத்தில் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, லாரி டயரில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்து இருக்கிறது.

    சுபஸ்ரீ பலியான பள்ளிகரணையில் மீண்டும் சரிந்து விழுந்த 60 அடி உயர பேனர்.. அதிர்ச்சியில் மக்கள்சுபஸ்ரீ பலியான பள்ளிகரணையில் மீண்டும் சரிந்து விழுந்த 60 அடி உயர பேனர்.. அதிர்ச்சியில் மக்கள்

    சென்னை

    சென்னை

    இது தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் போலீசாரிடம் நிறைய கேள்விகளை எழுப்பியது. யாரிடம் அனுமதி வாங்கிவிட்டு அங்கு பேனர்கள் வைக்கப்பட்டது. பேனர்கள் வைத்தவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது.

    கடுமை

    கடுமை

    சுபஸ்ரீ விவகாரத்தில் விதிமீறி பேனர் வைக்க அனுமதித்தோர் மீதும், வைத்தவர் மீதும் என்ன நடவட்டிகை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியது. இதற்கு அரசு தரப்பு, லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். வழக்கு பதிவு செய்துள்ளோம். அதேபோல் பேனர் அச்சடித்த கடைக்கு சீல் வைத்துள்ளோம் என்று கூறினார்.

    என்ன கேள்வி

    என்ன கேள்வி

    இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், அப்படியென்றால் பேனர் வைக்க சொன்னவர்கள் மீது நடவடிக்கை இல்லையா?. பேனர் யாருக்காக வைக்கப்பட்டது. அவர்கள் பெயர் குற்றச்சாட்டில் சேர்க்கப்படவில்லையா என்று கடுமையாக கேள்வி எழுப்பினார்கள். போலீசுக்கு நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்தது.

    கடைசியில் சேர்ப்பு

    கடைசியில் சேர்ப்பு

    இதையடுத்து சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. பேனர் வைத்தவர் பெயரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்வியை அடுத்த போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் ஜெயகோபால் தற்போது நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    AIADMK Jeyagobal named included in FIR in the Subhasri death case .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X