சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆறாத ரணமாம் அம்மாவின் மரணம்.. ஜெயலலிதா நினைவு தினத்தை இன்றே அனுசரித்த கே சி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த நாள் டிசம்பர் 4 என ஆறுமுகசாமி ஆணையம் கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் அவர் குறித்த கவிதையை முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி வடித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு அங்கு 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென டிசம்பர் 4 ஆம் தேதி மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதையடுத்து லண்டன் டாக்டர் பீலேவுடனான வீடியோ கான்பிரன்ஸ் கால் மூலம் அறிவுரையை பெற்று அப்பல்லோ மருத்துவக் குழுவினர் பல்வேறு சிகிச்சையை அளித்தனர்.

“வார்னிங்”.. துரோகிகள் கூட்டம் வருது! அதிமுக மாஜி “சிக்னல்”.. ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கும் கண்கள் “வார்னிங்”.. துரோகிகள் கூட்டம் வருது! அதிமுக மாஜி “சிக்னல்”.. ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கும் கண்கள்

 ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதா மரணம்

எனினும் ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அதி்ர்ச்சி அடைந்த அதிமுகவினர் தங்கள் தலைவியின் இழப்பை ஏற்க முடியாமல் மருத்துவமனை வாசலிலேயே கதறி அழுத சம்பவங்கள் எல்லாம் நடந்தன.

 ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம்

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையம் பல்வேறு தரப்பினரை விசாரித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கையை தயார் செய்து அதை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 4 என குறிப்பிடப்பட்டது. இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் கூறினார்களே, அப்படியென்றால் இறந்த உடலுக்கு சிகிச்சை அளித்தனரா என்ற கேள்வி எல்லாம் எழுந்தது.

 ஜெயலலிதா இறந்த நாள்

ஜெயலலிதா இறந்த நாள்

இந்த நிலையில் ஜெயலலிதாவின் இறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் நலத்திட்டங்களை செய்தும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியும் அனுசரிக்கும் அதிமுகவினர் இந்த ஆண்டு டிசம்பர் 4 ஆ இல்லை டிசம்பர் 5 ஆ என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி ஒரு கருத்து கணிப்பை தனது ட்விட்டரில் நடத்தியிருந்தார்.

 ஆறாத ரணமாம்...

ஆறாத ரணமாம்...

அதில் ஜெயலலிதாவின் இறந்தநாள் டிசம்பர் 4, டிசம்பர் 5 என இரு ஆப்ஷன்களை கொடுத்திருந்தார். அந்த வகையில் டிசம்பர் 4 ஆம் தேதி இன்றைய தினம் ஜெயலலிதா மறைவு குறித்து ஒரு இரங்கல் கவிதையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆறாத ரணமாம் அம்மாவின் மரணம்...
ஆளுக்கொரு துயரம் , இருந்தும் அரசியலில் நுகரும்,
அதிகம் உயர்ந்த அந்த அதிமுக சிகரம் ... அவர் தலைமை தமிழகத்தின் அமைதிக்கு ஜனனம்...
அஞ்சாது தனித்திருந்தால் , நடந்திடுமோ மரணம்.
இயற்கை மூப்பென இயல்பாகும் மறைவும் ...
தாயாய் தமிழ் நாட்டின் குல மாந்தர் நலனில், தரம் உயர வேண்டியவை , தவறாமல் அளித்தாய்,
கள்ளர் கொண்டு அழித்த கள்ளிப்பால் கொலைகள் , களைவதற்கு நீர் தந்த கலவை பெண்ணுரிமை ..
சந்தித்த சோதைனை கள் , சட்டக் குளரல்கள், தந்திட்ட, தோழி யினால் தடம் மாறி வீழ்ந்தனையோ ...
தங்கள் சேவைக்கு , தமிழகமும், தமிழ்மகனும் , என்றும் புகழ் பெருக்கும்
நினைவில் நின்றதனால் ...

இவ்வாறு தனது கவிதையை கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

English summary
Ex MP K.C.Palanisamy writes poem on EX CM Jayalalitha's memorial day. Amid confusion to obsereve her memorial day, he is being observing the memorial day today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X