சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடித்து நொறுக்கும் அதிமுக.. வலிக்காமல் அடிக்கும் திமுக.. அப்ப ரஜினியின் முதல் எதிரி அதிமுகவா?

திமுகவை விட அதிமுக ரஜினியை அதிகமாக எதிர்த்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: சில நேரங்களில் எதிர்பாராத இடத்திலிருந்து அடி கிடைக்கும்.. அதுதான் அதிக வலியைக் கொடுக்கும் என்பார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் தரப்பு எதிர்பாத வகையில் அதிமுகவிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதாக உள்ளது.

உண்மையில் திமுகதான் கடுமையாக கொந்தளித்து ரஜினி தரப்பை ஸ்தம்பிக்க வைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் திமுக தலைவர்கள் பெரிய அளவில் கடுமையான முறையில் கொந்தளித்தது போலத் தெரியவில்லை.

ஆனால் ரஜினி தரப்பு சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக தரப்பு ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி பல்வேறு அமைச்சர்களும் விடாமல் ரஜினிகாந்த்தை விமர்சித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

பெரியார் தலைமையில் சேலத்தில் நடந்த 1971 பேரணியை வைத்து ரஜினி கிளப்பிய புயல் இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஒருபக்கம் அவர் மீது வழக்கு தொடர்ந்து கொண்டுள்ளனர். மறுபக்கம் ரஜினி பேச்சை மறுத்து ஆதாரங்களை அடுக்கி வருகின்றனர். டிவிட்டர் டிரண்டிங்கும் ஓய்ந்தபாடில்லை. இதுபோன்ற வாதப் பிரதிவாதங்கள் இன்னும் சூடு குறையாமல் ஓடிக் கொண்டுள்ளன.

அதிமுக

அதிமுக

மறுபக்கம் திராவிடக் கட்சிகள் மறைமுகமாக ஒன்று திரண்டு ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இதில் முன்னணியில் இருப்பது யார் என்று பார்த்தால் அதிமுக தான் லீடிங்கில் உள்ளது. அதாவது ரஜினியை அழுத்தம் திருத்தமாக கண்டித்து வருவது அதிமுகவினர்தான் அதிகமாக உள்ளனர். திமுக தரப்பு இந்த விஷயத்தில் பெரிதாக கொந்தளித்தது போலத் தெரியவில்லை.

கண்டனம்

கண்டனம்

திமுகவிலிருந்து சில தலைவர்கள் கண்டித்து கருத்து வெளியிட்டதோடு ஒதுங்கி விட்டனர். திமுக ஆதரவு திராவிடக் கட்சிகளின் தலைவர்கள்தான் அதிக அளவில் ரஜினியை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவர் அழகிரி. ரஜினிக்கு வலிக்காதது போல ஒரு கண்டனத்தைத் தெரிவித்து ஒதுங்கிக் கொண்டார்.

ஈவிகேஎஸ்

ஈவிகேஎஸ்

இதில் என்ன விசேஷம் என்றால் பெரியாரின் பேரனான முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவரிடமிருந்து ஒரு வார்த்தை கூட விமர்சித்தோ, கண்டனம் தெரிவித்தோ எதுவும் வரவில்லை. இப்படித்தான் இருக்கிறது காங்கிரஸ் வட்டார நிலவரம். காங்கிரஸ் ஒரு வேளை இது திக. திமுக சம்பந்தப்பட்ட மேட்டர் என்று நினைத்து விட்டதோ என்னவோ தெரியவில்லை.. அல்லது எதிர்காலத்தில் ரஜினியுடன் கூட்டணி வைக்க வேண்டி வருமே என்ற கவலையா என்றும் புரியவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

இது மேட்டர் இல்லை.. உண்மையில் திமுகவை விட அதிமுக தலைவர்கள்தான் அதிக அளவில் கடுமையாக ரஜினியை கண்டித்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக ரஜினியின் 2வது மகளுக்கு மறுமணம் நடக்கக் காரணமே பெரியார்தான் என்று "விஞ்ஞானி" என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் செல்லூர் ராஜுவே விமர்சித்து விட்டார். இதுதான் பெரிய ஹைலைட். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கூட கடுமையாகவே விமர்சித்துள்ளனர்.

ரஜினி தரப்பு

ரஜினி தரப்பு

ஆனால் திமுக தரப்பில் பெரிய அளவில் இதுவரை கண்டனங்கள் எழவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் ரஜினி தரப்பு எதிர்பார்க்காத வகையில் அதிமுகவிலிருந்துதான் அழுத்தம் திருத்தமாக ஓங்கி ஒலித்துக் கொண்டுள்ளன கண்டனங்கள்!!

English summary
actor rajnikanth issue: aiadmk leads from the front to tame rajinikanth on periyar issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X