சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுத்தம்.. மத்திய அமைச்சர் பதவி அதிமுகவுக்கு கிடையாது போலயே!

மத்திய அமைச்சரவையில் தமிழகம் இடம் பெறுமா என்பது உறுதியாக தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா, இல்லையா?

    சென்னை: நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்று கொள்கிறார் பிரதமர் மோடி. ஆனால் புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா, இல்லையா என்பதே பெரிய சந்தேகமாக உருவெடுத்து நிற்கிறது.

    பொதுவாகவே மத்திய அமைச்சரவை புதிதாக பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்படுவதுண்டு.

    அந்த வகையில் இன்றைய பதவி ஏற்பு நாளில் அமைச்சர்கள் யார் யார் இடம் பெற போகிறார்கள், குறிப்பாக தமிழகம் சார்பில் யார் மத்திய அமைச்சராக பொறுப்பேற்க போகிறார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

    அம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சு.. நா வறண்டு போன சென்னை மக்களின் ஏக்கம் அம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சு.. நா வறண்டு போன சென்னை மக்களின் ஏக்கம்

    அமித்ஷா

    அமித்ஷா

    மத்திய அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் யார் என்பது குறித்து மோடியும், அமித்ஷாவும் கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு சில கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அமித்ஷா பேசினார். ஒருசிலரை போனிலும் தொடர்பு கொண்டு பேசினார்.

    ஓபிஎஸ் மகன்

    ஓபிஎஸ் மகன்

    இங்கு தமிழகத்தை பொறுத்தவரை, மத்திய அமைச்சர் பதவி யாருக்கு என்பதில் கடும் போட்டா போட்டியே ஏற்பட்டது. முறைப்படி ஜெயித்து வந்ததால், தன் மகனுக்குத்தான் அமைச்சர் பதவி என்று ஓபிஎஸ் கொக்கரித்தார். ஆனால் இதற்கு கட்சிக்குள்ளேயே சலசலப்புகள் எழுந்தன.

    அதுக்குள்ள பதவியா?

    அதுக்குள்ள பதவியா?

    "இப்பதான் தேர்தலில் ஜெயிச்சாரு, அதுக்குள்ளயே மத்திய அமைச்சர் பதவியா? ஏற்கனவே எம்பியாக இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி இல்லையா" என்று முன்னாள் மாநில அமைச்சர் வைத்திலிங்கம் கட்சிக்குள் உரிமை குரல் எழுப்பினார். இவருக்காக நிறைய ஆதரவும் கட்சிக்குள் இருக்கிறது.

    செல்வாக்கு மிக்கவர்

    செல்வாக்கு மிக்கவர்

    இதற்கு காரணம், ஜெயலலிதா இருந்தபோது, கட்சி விசுவாசிகளில் முக்கியமானவர் வைத்திலிங்கம். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியடைந்தாலும், அவர் மீது மதிப்பு வைத்திருந்த ஜெயலலிதா மாநிலங்களவை எம்பி ஆக்கினார். அதுமட்டுமல்ல, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் தந்தார். இப்போது நடந்து முடிந்த தேர்தலில்கூட, இவரது ஆலோசனைபடிதான் வேட்பாளர் தேர்வே நடந்துள்ளது. அந்த அளவுக்கு முக்கியமான நபர்தான் வைத்திலிங்கம். அதனால்தான் ஓபிஎஸ்-க்கு நிகராக இன்று வரை செல்வாக்குடன் நிற்கிறார்.

    சலசலப்பு

    சலசலப்பு

    எனினும், இப்படி கட்சிக்குள் நீயா, நானா என்று இருக்கும்போது, தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை உடனடியாக தர வேண்டாம் என்று பாஜக தரப்பில் சொன்னதாக ஒரு தகவல் கசிந்தது. இதையடுத்து அதிமுக ஆடிப் போயுள்ளதாம் இந்தசூழலில்தான் நேற்று மாலை முதல்வரை சென்று சந்தித்து பேசியிருக்கிறார் வைத்திலிங்கம்.

    பிரதிநிதித்துவம்

    பிரதிநிதித்துவம்

    "இவங்களோட கூட்டணி வைக்க போயிதானே இப்படி தேனி தவிர எல்லாத்துலயும் தோத்துட்டு நிக்கறோம். இல்லேன்னா ஓரளவு அதிமுக ஜெயித்திருக்கவே செய்யும். இப்போ மத்திய அமைச்சரவையில்கூட இடம் தரலேன்னா, அது இன்னும் நிலைமையை மோசமாக்கி விடும், தமிழகத்தில் அடுத்த தேர்தலில் நாம ஜெயிக்கவே முடியாமல் போய்விடும். அதனால் அதிமுகவுக்கென்று ஒரு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இதையடுத்து முதல்வர் தரப்பில் இருந்து பாஜக தலைமைக்கு மத்திய அமைச்சரவை பதவி குறித்து திரும்பவும் வலியுறுத்தப்பட்டதாம்.

    அவப்பெயர்

    அவப்பெயர்

    இதன் முடிவு என்ன, மத்திய அமைச்சரவையில் தமிழகம் இடம்பெறுமா, அப்படியே இடம்பெற்றாலும் அமைச்சராக பொறுப்பேற்க போவது யார் என்பதெல்லாம் பாஜகவின் கையில்தான் உள்ளது. ஒருவேளை அதிமுக சார்பில் பொறுப்பு தந்தால், பிரதிநிதித்துவம் பெற்றதற்கான அடையாளமாக இருக்கும், இல்லாவிட்டால் தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக என்ற கட்சி ஒட்டுமொத்த தோல்வியையே சந்தித்தது என்ற அவப்பெயரைதான் தாங்க நேரிடும். எதுவா இருந்தாலும் இன்னைக்கு சாயங்காலம் தெரிந்துவிடும்!

    English summary
    It is not clear who will get the seat for the Tamil Nadu government in the Union Cabinet. But AIADMK is expected to get in the Union Cabinet
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X