சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ், முரளிதரராவுடன் ஜி.கே வாசன் சந்திப்பு.. அதிமுகவுடன் தமாகா கூட்டணி ஆலோசனை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்திப்பு நடத்தி லோக்சபா கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்திப்பு நடத்தி லோக்சபா கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.

லோக்சபா தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் மிகவும் சூடாக இருக்கிறது. எந்தக்கட்சி யாருடன் கூட்டணி வைக்கும், யார் எந்த பக்கம் செல்வார்கள் என்ற பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.

AIADMK Lok Sabha Alliance: OPS holds talk with Tamil Maanila Congress chief G K Vasan

இந்த நிலையில் எல்லா கட்சிகளுக்கும் முன்னதாக வேகமாக செயல்பட்டு அதிமுக தனது கூட்டணியை அறிவித்து வருகிறது. அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் இதுவரை கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அதோடு அதிமுக - தேமுதிக கூட்டணியும் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்று கூறுகிறார்கள். இதற்கு மத்தியில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக, பாஜக நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பே அதிமுகவுடன் தமாகா ஆலோசனை செய்ததாக செய்திகள் வந்தது. ஆனால், அப்போது அந்த செய்தியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் மறுத்திருந்தார். தமாகா நிர்வாகிகளும் அதை மறுத்திருந்தனர்.

ஆனால் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்திப்பு நடத்தி லோக்சபா கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வருகிறார். மதுரை விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது.

பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவும் இந்த சந்திப்பில் உடன் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் தமாகா இணைவது குறித்து, அதில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சந்திப்பின் முடிவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

English summary
AIADMK Lok Sabha Alliance: O Paneerselvam holds talk with Tamil Maanila Congress chief G K Vasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X