சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சியை தக்க வைத்த அதிமுக.. இந்த டுவிட்ஸ்டை எதிர்பார்த்திருக்காது.. திமுக வசமான ராஜ்யசபா சீட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி...அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்

    சென்னை: ஆளும் அதிமுக அரசு 9 சட்டமன்ற தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்ட போதிலும், குறைந்த இடங்களில் வென்றதால் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுகவிடம் பறிகொடுத்துள்ளது.

    தமிழகத்தில் அதிமுகவுக்கு 12 ராஜ்யசபா எம்பிக்களும், திமுகுவுக்கு 4 எம்பிக்களும், சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு எம்பிக்களும் உள்ளனர். இதில் இரண்டு இடதுசாரி கட்சிகளும் அதிமுக தயவில் ராஜ்யசபா எம்பி சீட்டை பெற்று இருந்தன.

    இதில் திமுகவில் கனிமொழி, சிபிஐ கட்சியில் டி ராஜா, அதிமுகவின் கே ஆர் அர்ஜுனு, ஆர் லட்சுமணன், வி மைத்ரேயன் மற்றும் ஆர் ரத்னவேல் உள்பட 6 எம்பிக்களின் பதவி காலம் வரும் ஜுலை 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    3 அமைச்சர்களின் பதவியை பறிக்க குமாரசாமி முடிவு.! மக்களவை தேர்தலில் மகன் தோற்றதால் அதிரடி 3 அமைச்சர்களின் பதவியை பறிக்க குமாரசாமி முடிவு.! மக்களவை தேர்தலில் மகன் தோற்றதால் அதிரடி

    திமுக பலம் உயர்வு

    திமுக பலம் உயர்வு

    தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களை வென்றதன் மூலம் 101 ஆக திமுகவின் பலம் அதிகரித்துள்ளது.கடந்த 2016ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடந்த போது திமுக 4 பேரையும், அதிமுக இரண்டு பேரையம் ராஜ்யசா எம்பிக்களாக அனுப்பியது. இதன்படி தமிழகத்தில் 39 எம்எல்ஏக்கள் சேர்ந்து ஒரு ராஜ்யசபா எம்பியை தேர்வு செய்து அனுப்புகிறார்கள். அந்த வகையில் 117 என்ற மேஜிக் நம்பரை இந்த இடைத்தேர்தல் மூலம் கைப்பற்ற முடிந்த அதிமுகவால் தனது 4வது ராஜ்யசபா எம்பியை காப்பாற்ற முடியுவில்லை.

    திமுக கூட்டணி

    திமுக கூட்டணி

    அதிமுகவுக்கு தற்போது சபாநாயகருடன் சேர்த்து 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். திமுகவுக்கு 101 எம்பிக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்எல்ஏக்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லிக் மற்றும் அமமுகவுக்கு தலா ஒரு இடங்களும் உள்ளன.

    திமுகவில் 4எம்பிக்கள்

    திமுகவில் 4எம்பிக்கள்

    இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ராஜ்யசபா எம்பியாக்குவதாக திமுக உறுதி அளித்துள்ளது. அதேநேரம் மீதமுள்ள 3 இடங்களுக்கு எந்த கட்சியை சேர்ந்தவர்களையம் எம்பியாக்குவதாக திமுக உறுதி அளிக்கவில்லை. எனவே திமுக தலைமையின் விருப்பப்படி,3 பேர் எம்பியாவார்கள்.

    அன்புமணிக்கு ஒன்று

    அன்புமணிக்கு ஒன்று

    அதிமுகவில் இந்த முறை 3 எம்பிக்கள் தான் தேர்வு செய்ய முடியும். இதேபோல் மைத்ரேயன் மற்றும் தம்பித்துரை ஆகியோரும் எம்பியாகிறார்கள். அதேநேரம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக உறுதி அளித்துள்ளதால் அவரும் எம்பியாகிறார். அதேநேரம் அன்புமணிக்காக ராஜ்யசபா சீட்டை விட்டுக்கொடுப்பதில் தேர்தலில் தோற்ற அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு இடையே கசப்பும் இருக்கிறது.

    English summary
    AIADMK Loss one Rajya sabha MP seat, but DMK get one more Rajya sabha MP for by elections winning
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X