சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவுக்கு இது தேவையா... பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எவ்வளவு இழப்புகள் தெரியுமா

Google Oneindia Tamil News

Recommended Video

    ADMK Vs BJP: அமைச்சரவையில் இடம் கொடுக்காத பாஜக.. என்ன செய்ய போகிறது அதிமுக?- வீடியோ

    சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக ஒரு தொகுதியில் கூட தமிழகத்தில் வெல்ல முடியவில்லையே என்ற கடும் கோபத்தில் இருக்கிறது. ஆனால் உண்மையில் வேதனைப்படவும் கோபப்படவும் வேண்டியது அதிமுக தான். ஏனெனில் அதிமுக தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

    எல்லாருக்கும் மறந்து போயிருக்கலாம் 2004ம் ஆண்டை... அதை இப்போது மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளதால் குறிப்பிடுகிறேன். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்தித்து. ஆனால் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் ஜெயலலிதா பல இடங்களில் அறிவித்துள்ளார்.

    என் வாழ்நாளில் ஒரு காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறினார். அதன்படியே செயல்பட்டார். இப்போது அதிமுக தலைமையினர் பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பதை போன்று ஒரு காலத்திலும் எந்த கட்சியுடன் ஜெயலலிதா செயல்பட்டதில்லை. அவர் சொல்வதை கேட்டால் மட்டுமே கூட்டணி. அதுவும் அவரை தேடிப்போய் டெல்லி தலைவர்கள் சந்திக்க வேண்டும். யாரையும் தேடிப்போய் சந்திக்க மாட்டார். அவர்கள் தான் தேடிப்போய் சந்திக்க வேண்டும். அப்படி ஒரு கம்பீரம், கெத்து, தைரியம் ஜெயலலிதாவுக்கு உண்டு.

    இப்டி கெக்கேபிக்கேனு சிரிச்சுக்கிட்டே ப்ரே பண்ணினா நேசமணி எப்டி பிழைப்பாரு பாஸ்?இப்டி கெக்கேபிக்கேனு சிரிச்சுக்கிட்டே ப்ரே பண்ணினா நேசமணி எப்டி பிழைப்பாரு பாஸ்?

    அதிமுக மீது கோபம்

    அதிமுக மீது கோபம்

    அப்படிப்பட்ட தலைவரை இழந்த அதிமுகவினர் அடுத்த நிலை தலைவர்கள், ஆட்சியை காப்பாற்ற பாஜகவுக்கு விசுவாசமாக இருந்து தங்களுக்கு இருந்த மக்கள் செல்வாக்கையும், தொகுதிகளையும் இழந்து தவித்து வருகிறார்கள். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எவ்வளவு பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது என்பதை இப்போது பார்த்துவிடுவோம்.

    அதிமுக இழப்பு

    அதிமுக இழப்பு

    ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களை இப்போது உள்ள அதிமுக ஆட்சி, தமிழகத்தில் செயல்படுத்த அனுமதித்தால், பாஜக மேல் இருந்த கோபம் மொத்தமும் அதிமுகவின் மீது திரும்பியது.இதன் விளைவாக அதிமுகவின் செல்வாக்கு மக்களிடம் இந்த தேர்தலில் பெரியஅளவில் சரிந்துள்ளது. இத்துடன் அதிமுகவில் பாஜகவால் ஏற்பட்ட பங்காளிச்சண்டையாலும் பெரிய பாதிப்பு அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

    வாக்கு சதவீதம் சரிவு

    வாக்கு சதவீதம் சரிவு

    கடந்த 2014ம் ஆண்டு தனித்து நின்று 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி 44.3 சதவீதம் ஆகும். ஆனால் இப்போது 2019ம் ஆண்டில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது, வாக்கு சதவீதமும் 18.8 சதவீதமாக குறைந்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த அமமுக 5.25 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றது.

    துணை சபாநாயகர் பதவி

    துணை சபாநாயகர் பதவி

    கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவின் 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தில் இருந்த அதிமுக 2019ம் ஆண்டு பெரிய கட்சி அந்தஸ்தை பறிகொடுத்துள்ளது. இதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கே கிடைக்காத துணை சபாநாயகர் பதவி அதிமுகவுக்கு தான் 2014ம் ஆண்டு கிடைத்து. இப்போது அந்த பதவியும் அதிமுகவிடம் இல்லை.

    தனித்து இருந்திருந்தால்

    தனித்து இருந்திருந்தால்

    சட்டமன்ற இடைத்தேர்தலில் பார்த்தால் திருவாரூர் தவிர மற்ற 21 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும். இந்த தொகுதிகளில் 12 இடங்களை திமுகவிடம் பறிகொடுத்துள்ளது. வாக்க சதவீதத்தை அடிப்படையாக கொண்டு அதிமுக தலைமை அமைத்த கூட்டணி மக்கள் நிராகரித்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதற்கு எல்லாம் மிக முக்கிய காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான். ஒருவேளை அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து செயல்பட்டு இருந்தால் இந்நேரம் அதிமுகவில் இவ்வளவு பெரிய சண்டைகளும் வந்திருக்காது. அதிமுக எப்போதும் போல் தான் இருந்திருக்கும்.

    English summary
    aiadmk loss vote share and 36 Lok Sabha constituencies in tamilnadu after alliance with bjp in lok sabha elections 2019
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X