சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பச்சை கிளியா? அந்த பெயரே இதுல இல்லையே.. பாமகவை கண்டுகொள்ளாத அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி!

பாமகவின் மிக முக்கியமான கோரிக்கையான மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பும் அதிமுகவின் லோக்சபா தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    பல திட்டங்களுடன் வெளியானது தேர்தல் அறிக்கை

    சென்னை: பாமகவின் மிக முக்கியமான கோரிக்கையான மதுவிலக்கு குறித்து எந்த அறிவிப்பும் அதிமுகவின் லோக்சபா தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை.

    ''பச்சை கிளிங்கிற பெயரே இதுல இல்லையே'' என்று வடிவேல் காமெடி ஒன்றில் பிரபலமான வசனம் இடம்பெறும். அப்படித்தான் இன்று வெளியான அதிமுக தேர்தல் வாக்குறுதி அறிக்கையும் அமைந்து இருக்கிறது.

    அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பாமக வைத்த கோரிக்கைகள் எதுவும் பெரிதாக இடம்பெறவில்லை. பாமகவின் கோரிக்கைகளை அதிமுக கண்டுகொண்டது போலவே தெரியவில்லை.

    மாணவர்களுக்காக நலத்திட்டம்.. கல்வியில் கவனம் செலுத்தும் திமுக.. நீட் முதல் கல்வி கடன் வரை!மாணவர்களுக்காக நலத்திட்டம்.. கல்வியில் கவனம் செலுத்தும் திமுக.. நீட் முதல் கல்வி கடன் வரை!

    பாமக அதிமுக

    பாமக அதிமுக

    லோக்சபா தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி வைப்பது நிறைய இழுபறியுடன் நடந்து கொண்டு இருந்தது. பாமக 7 தொகுதிகள் கேட்டதுடன் நிறைய கோரிக்கைகளை முன்வைத்தது. இதனால் நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை நடந்து அதிமுக - பாமக கூட்டணி முடிவானது.

    என்ன கோரிக்கை

    என்ன கோரிக்கை

    ஆனால் பாமக இதில் 10 அம்ச கோரிக்கைகளை வைத்துதான் கூட்டணிக்கு சம்மதித்தது. அதில் மிக முக்கியமான கோரிக்கை மதுவிலக்கு. தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாமக அதிமுக கூட்டணி உருவாக்கபட்டது.

    அதிமுக அறிக்கை

    அதிமுக அறிக்கை

    இந்த நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. மது தொடர்பான எந்த ஒரு திட்டம் குறித்தும் அதிமுக அறிவிக்கவில்லை. மதுக்கடைகள் குறைக்கப்படும் என்றும் கூட அதிமுக அறிவிக்கவில்லை.

    இருந்தது

    இருந்தது

    ஆனால் பாமகவின் கோரிக்கைகளான பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை, காவிரி - கோதாவரி இணைப்பு ஆகியவை குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு வலியுறுத்துவோம், காவிரி - கோதாவரி இணைப்பிற்கு வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    AIADMK manifesto doesn't have a single word on PMK's no TASMAC demand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X