சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடனே பறந்த போன் கால்.. அவர்களை நம்பி நாங்களும் கெட்டோம்.. அதிமுக மீது கோபத்தில் அமித் ஷா!

லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தல் தோல்வி! அதிமுக - பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள்

    சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

    அதிமுக கட்சி லோக்சபா தேர்தலுக்காக பெரிய அளவில் கூட்டணி அமைத்தது. திமுக கூட்டணிக்கு இணையாக அதிமுக தனது கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தது.

    ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவியது. இது பாஜக தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளதாக கூறுகிறார்கள்.

    அவர்தான் வெற்றிக்கு காரணம்.. ஓபிஎஸ் பக்கம் தாவும் நிர்வாகிகள்.. அதிமுகவில் நடக்கும் பரபர மாற்றம்! அவர்தான் வெற்றிக்கு காரணம்.. ஓபிஎஸ் பக்கம் தாவும் நிர்வாகிகள்.. அதிமுகவில் நடக்கும் பரபர மாற்றம்!

    மிக மோசம்

    மிக மோசம்

    அதிமுக தான் போட்டியிட்ட தொகுதியில் எல்லாம் மிக மோசமான தோல்வியை தழுவியது மட்டுமில்லாமல், தனது வாக்கு வங்கியையும் இழந்து இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிமுக மட்டுமில்லாமல் பாஜக, பாமக, தேமுதிகவும் தனது வாக்கு வங்கியை மொத்தமாக இழந்து இருக்கிறது.

    ஆனால் வெற்றி

    ஆனால் வெற்றி

    ஆனால் அதிமுக இடைத்தேர்தலில் மட்டும் நன்றாக செயல்பட்டு வெற்றியை ஈட்டி உள்ளது. தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 22 தொகுதியில் அதிமுக 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் அதிகம் அடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    பாஜக கோபம்

    பாஜக கோபம்

    இதுதான் தற்போது பாஜகவிற்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் மட்டும் எப்படி வெற்றி சாத்தியமானது. அதிமுக அப்போது லோக்சபா தேர்தலுக்கு வேலை செய்யவில்லையா. கூட்டணி அமைத்ததோடு அமைதியாகிவிட்டார்களா என்று பாஜக கோபம் கொண்டுள்ளது.

    போன் கால்

    போன் கால்

    இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் தமிழக பாஜக நிர்வாகி ஒருவர் போன் மூலம் புகாரும் அளித்து இருக்கிறார். லோக்சபா தேர்தலுக்காக அதிமுக நிர்வாகிகள் யாரும் வேலை செய்யவில்லை. வெறும் 10 சட்டசபை தொகுதியில் மட்டும்தான் அதிமுகவினர் மொத்தமாக களமிறங்கி வேலை பார்த்தனர். தற்போது சரியாக அங்கு வெற்றிபெற்று இருக்கிறார்கள்.

    அதிமுகவிற்கு இல்லை

    அதிமுகவிற்கு இல்லை

    அதிமுகவிற்கு லோக்சபா தேர்தல் மீது அக்கறை இல்லை. இதனால் தமிழகத்தில் பாஜகவும் மோசமான பின்னடைவை சந்தித்து உள்ளது என்று கூறுகிறார்கள். அதிமுகவின் மெத்தனம் காரணமாக பாஜக வாக்கு வங்கியை இழந்ததாக புகார் சென்றுள்ளது . இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    அமித் ஷா கடுப்பு

    அமித் ஷா கடுப்பு

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழக அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும். விரைவில் அதிமுகவில் மாற்றங்களை கொண்டு வர இவர் அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள். இதற்காக தமிழக பாஜக பிரமுகர் ஒருவர் களத்தில் இறங்கி பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    AIADMK may face trouble in NDA after the huge election loss.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X