சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது?

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN By Election: அதிமுக-வின் 4 தொகுதி வேட்பாளர்கள் யார்..?- வீடியோ

    சென்னை: 4 தொகுதிகளுக்கு திமுக, அமமுகவும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் அதிமுக மட்டும் இன்னும் அறிவிக்காமலேயே உள்ளது!

    காலியாக உள்ள ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கு வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக, அதிமுக உள்ளன.

    அதேபோல, தினகரன் எம்பி தேர்தலைவிட இடைத்தேர்தலையே பெரிதாக நினைக்கிறார். ஆக இந்த 3 கட்சிக்குமே 4 தொகுதி தேர்தல் அதிமுக்கியமானது என்பதால் வேட்பாளர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளனர்.

    செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த தினகரன்.. ஷாகுல் ஹமீதுவை களமிறக்கி ஸ்மார்ட் மூவ்!செந்தில் பாலாஜிக்கு செம செக் வைத்த தினகரன்.. ஷாகுல் ஹமீதுவை களமிறக்கி ஸ்மார்ட் மூவ்!

    அறிவிப்பு

    அறிவிப்பு

    2 கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அதிமுக மட்டும் அறிவிக்கவில்லை. இப்படித்தான் எம்பி தேர்தலின்போது வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் அதிமுக தாமதம் செய்தது. நாளெல்லாம் கூடி கூடி பேசியது. கடைசியில் இரவு 11 மணிக்கு செய்தியாளர்களைகூட சந்திக்காமல் வெறும் வேட்பாளர் பெயர் பட்டியலை அறிவித்தது. இதற்கு காரணம், மதுரை தொகுதியும், அந்த மாவட்டத்தின் உட்கட்சி பூசலும்தான்!

    ராஜ்சத்யன்

    ராஜ்சத்யன்

    செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் இருவருமே பிரச்சனை செய்து, ஆளுக்கு ஒரு வேட்பாளரை கை காட்டினார்கள். இதில் அதிமுக தலைமை மண்டை காய்ந்துவிட்டது. கடைசியில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தீவிர ஆதரவாளரான ராஜ்சத்யன்தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அறிவிக்கவில்லை

    அறிவிக்கவில்லை

    இப்போதும் இதே போல பஞ்சாயத்துதான் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பதில் நடந்து வருகிறது. நேற்றே அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அக்கட்சி சார்பில் ஆலோசனை கூட்டமும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. ஆனால் ராத்திரி ஆகியும் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை.

    நீளும் குழப்பம்

    நீளும் குழப்பம்

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு யாரை வேட்பாளராக்குவது என்பதில் குழப்பம் நீண்டு கொண்டே போனது. செல்லூர் ராஜு ஒரு பக்கம், ஆர்பி உதயகுமார் ஒரு பக்கம், ராஜன் செல்லப்பா ஒரு பக்கம் என ஆளுக்கு ஒரு வேட்பாளரை கை காட்டுகிறார்களாம்.

    போஸ் குடும்பம்

    போஸ் குடும்பம்

    ஆளும் தரப்பு, அரசியல் பலம், தொகுதியில் செல்வாக்கு போன்றவைகளின் நெருக்கடி ஒரு பக்கம் என்றால் மரணமடைந்த எம்எல்ஏ போஸ் குடும்பத்தினரும் சீட் கேட்டு வருகிறார்களாம். அதனால் இப்படி நாலா பக்கமும் அணை கட்டப்படுவதால் மதுரை தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஆகி வருகிறது.

    கடம்பூர் ராஜு

    கடம்பூர் ராஜு

    இதேபோல சூலூரில் மரணமடைந்த எம்எல்ஏ கனகராஜ் மனைவியும் சீட் கேட்கிறார். ஒட்டப்பிடாரத்தில் தான் சொல்லும் நபருக்குதான் சீட்டு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சொல்கிறாராம். ஆனால் இதே ஒட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி அல்லது அவரது மகனை நிறுத்தினால் வெற்றி எளிது என்று ஒரு தரப்பு சொல்கிறதாம். இதனால் சூலூர், ஒட்டப்பிடாரத்திலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஆட்சிக்கு ஆபத்து

    ஆட்சிக்கு ஆபத்து

    இந்த லோக்கல் பாலிட்டிக்ஸ் எல்லாவற்றையும் தாண்டி, 4 தொகுதிகளிலும் சமரசம் ஏற்பட்டு அதன்பின்னரே வேட்பாளர்களை அதிமுக இன்று அறிவிக்கும் என தெரிகிறது. ஆனால் யாரை நிறுத்தினாலும் 21 தொகுதிகளில் வென்றாக வேண்டிய நெருக்கடி, நிர்ப்பந்தம், கட்டாயத்தில் அதிமுக உள்ளது என்பதும், இல்லாவிட்டால் ஆட்சிக்கே ஆபத்து என்பதையும் உட்கட்சி பூசலையும் தாண்டி இவர்கள் எல்லாம் நினைப்பார்களா என்றுதான் தெரியவில்லை.

    English summary
    AIADMK will announce candidates for By elections in 4 Seats today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X