சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 3 நாட்களில் மீட்டிங்.. அதே வெற்றி பார்முலாதான்.. உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக ரெடி!

அதிமுக கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எம்.எல்.ஏ, எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எம்.எல்.ஏ, எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இன்னும் ஒன்றரை மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.,

இதற்காக அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நவ.6ஆம் தேதி ஆலோசனை நடக்க உள்ளது. இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ரஜினியுடன் அரசியலில் நாங்கள் மாறுபடுகிறோம்.. ஆனால்.. கே எஸ் அழகிரிரஜினியுடன் அரசியலில் நாங்கள் மாறுபடுகிறோம்.. ஆனால்.. கே எஸ் அழகிரி

அதே பார்முலா

அதே பார்முலா

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தலில் அதிமுக கூட்டணி மாஸ் வெற்றிபெற்றது. அதேபோல் வெற்றியை பதிவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்தல் நிர்வாகிகளை அறிவிக்க அதிமுக கட்சி முடிவு செய்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் .

யார் எல்லாம்

யார் எல்லாம்

அதன்படி பிரச்சார குழு, வேட்பாளர்கள் தேர்வுக்குழு, வாக்குறுதி குழு என்று மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட குழுக்களை அதிமுக உருவாக்க உள்ளது. விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தல் பார்முலாவை பயன்படுத்துவது தொடர்பாகவும் இதில் விவாதிக்க உள்ளனர்.

கூட்டணி எப்படி

கூட்டணி எப்படி

இது மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை உள்ளாட்சி இடங்கள் ஒதுக்குவது என்பது குறித்தும் அதிமுக ஆலோசனை செய்து வருகிறது. பாஜக கட்சியை கீழ் இருந்து வளர்க்க விரும்புவதால், உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கேட்கும். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தேர்தலில் பாமகவின் அதிகம் இருந்ததால் வட மாவட்டங்களில் அந்த கட்சியும் அதிக இடங்களை கேட்கும் என்கிறார்கள்.

திமுக பொதுக்குழு

திமுக பொதுக்குழு

இன்னொரு பக்கம் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடக்க உள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள். திமுக கட்சியும் தேர்தலுக்கான நிர்வாகிகளை இதில் நியமிக்க வாய்ப்புள்ளது.

English summary
AIADMK MLA and MPs Meeting: The party will discuss Local Body elections on November 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X