சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேமுதிகவுக்கு 500 ஓட்டுதான் இருக்குது.. வெளுத்து வாங்கிய அதிமுக எம்எல்ஏ.. அப்போ கூட்டணி?

Google Oneindia Tamil News

Recommended Video

    தேமுதிகவுக்கு 500 ஓட்டுதான் இருக்குது-அதிமுக எம்எல்ஏ-வீடியோ

    சென்னை: தேமுதிக வந்தால் அதிமுகவிற்கு, தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கூடுதலாக கிடைக்கும் என்று அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுகவுடன் கூட்டணி சேர தேமுதிக முயற்சி செய்து வருகிறது. ஆனால், நேற்று பேட்டியளித்த தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக எம்பிக்களையும், ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்து கருத்துக்களை தெரிவித்தார்.

    AIADMK MLA Kanagaraj slam Vijyakanth and DMDK

    இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வெளிப்படையாக அதை காட்டவில்லை. ஆனால், சூலுர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் தனது ஆதங்கத்தை பொங்கி தீர்த்துவிட்டார்.

    அவர் கூறியதை பாருங்கள். தேமுதிக, தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி பேசுவது மிகப்பெரிய தவறு. இங்கொன்றும், அங்கொன்றுமாக பேச்சுவார்த்தை நடத்துவது முறையான நடைமுறை கிடையாது.

    நினைத்தது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு.. அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு.. கிழித்த முரசொலி! நினைத்தது ஒண்ணு.. நடந்தது ஒண்ணு.. அதனாலே முழிக்குதே அம்மா பொண்ணு.. கிழித்த முரசொலி!

    தேமுதிகவால் தொகுதிக்கு 500 அல்லது 1000 வாக்குகள் கிடைக்கும். அரசியலில் இந்த வாக்குகளும் முக்கியம்தான் என்பதால் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மதிமுகவுக்கு கூட தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் இருக்கும். அவர்களும் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த்தை உயர்த்தியவர் ஜெயலலிதா. ஆனால் சட்டமன்றத்தில் நாகரீகம் இல்லாமல் விஜயகாந்த் நாக்கை துருத்தி நடந்துகொண்டதே தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேமுதிக வீழ்ச்சியடைந்துவிட்டதாக அதிமுக எம்எல்ஏ கூறியுள்ளது. பிரேமலதாவுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. எனவே, அதிமுக-தேமுதிக கூட்டணி இழுபறி நீடித்துக்கொண்டுள்ளது.

    English summary
    AIADMK MLA slam Vijyakanth and DMDK for it's attitude towards politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X