சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா நோய் தொற்று.. சென்னை மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் கே பழனிக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா நோய் தொற்று

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 327 பேர் பலியாகிவிட்டனர்.

    ADMK MLA Palani has infected with coronavirus

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ மதனந்தபுரம் பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தியா கடினமான சூழ்நிலையில் இருக்கிறது.. கவனமாக இருக்க வேண்டும்.. ராணுவ ஜெனரல் அதிரடி பேச்சு! இந்தியா கடினமான சூழ்நிலையில் இருக்கிறது.. கவனமாக இருக்க வேண்டும்.. ராணுவ ஜெனரல் அதிரடி பேச்சு!

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜே அன்பழகன் சிகிச்சை பலனின்றி பலியான நிலையில் தற்போது மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!" என்று கூறியுள்ளார்.

    English summary
    ADMK MLA Palani infected for Corona virus and he was admitted in Miot Hospital, Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X