சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சியே கலையும் வாய்ப்பு.. மே 23ல் க்ளைமேக்ஸ்.. புயலை கிளப்பும் 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல்

    சென்னை: காலியாக உள்ள, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலுர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும், மே 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

    ஏற்கனவே திருவாரூர் உட்பட 18 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போது மேலும் 4 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, மொத்தம் 22 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தல் ஒரு, மினி சட்டசபை தேர்தலை போல பார்க்கப்படுகிறது.

    மிச்சமுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல் மிச்சமுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல்

    4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்

    4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்

    மேற்சொன்ன 4 சட்டசபை தொகுதிகளுக்கும், ஏப்ரல் 22ல் மனுத்தாக்கல் ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 29ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். மே 19ல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 23ம் தேதி, லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ரிசல்ட்டும் வெளியாக உள்ளது. இதனால் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூர் மத்திய தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டி.. ஏன் இந்த தொகுதி.. அட இதுதான் காரணமா?

    7 வருட அதிமுக அரசு

    7 வருட அதிமுக அரசு

    லோக்சபா தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ, தமிழக மக்களிடையே இடைத் தேர்தல் ரிசல்ட்டுகள்தான் கடுமையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த 7 வருடங்களாக, தொடர்ந்து வரும் அதிமுக அரசு, இனியும் தொடருமா, இல்லையா என்பதை நிர்ணயிக்கப்போகும் தேர்தல் இதுதான்.

    சட்டசபையில் அதிமுக பலம்

    சட்டசபையில் அதிமுக பலம்

    தற்போதுள்ள சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கைப்படி, அதிமுகவுக்கு 114 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. தமிழக சட்டசபையின் பலம் 234 ஆகும். எனவே அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு, 118 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், ஆட்சியை தக்க வைக்க, குறைந்தது 4 தொகுதிகளையாவது அதிமுக வெல்ல வேண்டியது அவசியம்.

    பொதுத் தேர்தல்

    பொதுத் தேர்தல்

    ஒருவேளை 4 தொகுதிகளுக்கும் கீழே அதிமுக வென்றால், உடனடியாக தமிழகத்தில் அதிமுக அரசு கலையும். தமிழக சட்டசபைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் சூழல் எழும். 4 தொகுதிகளை வென்றால் போதுமா என்றால், அதுவும் கூட கத்தி மீது நடப்பதை போன்றதுதான். சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்தால் மீண்டும் இடைத் தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்படும்.

    சூழ்நிலை என்ன

    சூழ்நிலை என்ன

    22 தொகுதிகளில் வெறும் 4 தொகுதிகளைக் கூட வெல்ல முடியாத சூழ்நிலையில்தான் அதிமுக உள்ளதா என்ற கேள்வி எழலாம். ஆனால், தினகரனின் அமமுக அதிமுகவின் வாக்கு வங்கிக்கு வேட்டு வைக்கும் என்பதால், 4 தொகுதியிலும் வெல்வது மிகப்பெரிய இலக்காக மாறிப்போயுள்ளது அதிமுகவுக்கு. எனவேதான், லோக்சபா தேர்தல் கூட்டணியின்போதே, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளிடம், இடைத் தேர்தல்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக தலைமை கையெழுத்து வாங்கியுள்ளது. கூட்டணி வாக்கு வங்கி தங்களை கரை சேர்த்து ஆட்சியை காப்பாற்றும் என நம்புகிறது அதிமுக தலைமை.

    English summary
    AIADMK, which has 114 MLAs, needs to win just four of the 22 constituencies to reach the half-way mark of 118.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X