சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சித் தலைவர் யார்? ஓ.பி.எஸ் vs ஈ.பி.எஸ் - இன்று கிளைமேக்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Recommended Video

    EPS Or OPS ? | Who is the Leader of Opposition? of Tamilnadu Legislative Assembly? | Oneindia Tamil

    நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், பத்தாண்டுகளாக அதிகாரத்தில் இருந்த அதிமுக 65 இடங்களில் மட்டும் வெற்றிப் பெற்று ஆட்சியை இழந்தது. அதன் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றன. இதனால், 16-வது சட்டசபையில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக அமருகிறது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிமையான விழாவில், அவர் முதல்வராக பதவியேற்கிறார்.

    9 'டூ' 7.. முதல் நாளே அசுர பாய்ச்சல்.. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைமைச் செயலக நிகழ்வுகள்9 'டூ' 7.. முதல் நாளே அசுர பாய்ச்சல்.. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைமைச் செயலக நிகழ்வுகள்

     தலைமை அலுவலகம்

    தலைமை அலுவலகம்

    இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (மே.7) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்க இருக்கிறார்கள்.

     கடும் போட்டி

    கடும் போட்டி

    இந்த கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. மேலும், கட்சியின் கொறடா தேர்ந்தெடுக்கப்படுவதுடன், 16-வது சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட இருக்கிறது. எனினும், எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் என சில நிர்வாகிகள் தெரிவித்தாலும், ஓ.பி.எஸ். - இடையே பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.

     ஈ.பி.எஸ். பிடிவாதம்

    ஈ.பி.எஸ். பிடிவாதம்

    முதல்வர் பதவியை கடந்த முறை எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்த எனக்கு தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்று ஓ.பி.எஸ் கோரிக்கை வைக்க, கொங்கு மண்டலத்தில் அதிமுக பெற்ற வெற்றியை கணக்கு காட்டி, எடப்பாடியார் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாராம். இதனால், இரு தரப்புக்கும் இடையே பதவியை பிடிப்பதில் கடும் போட்டி இன்று நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     மரபின் அடிப்படையில்

    மரபின் அடிப்படையில்

    இந்த சூழலில், அதிமுக செய்தி தொடர்பாளரான கோவை செல்வராஜ், ஓ.பன்னீர்செல்வத்தையே எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், அதிமுகவின் மற்றொரு செய்தி தொடர்பாளரான புகழேந்தியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் அதிமுகவில் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், மரபின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    English summary
    AIADMK MLAs meeting to choose legislative leader - அதிமுக
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X