சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரதாத் பங்கேற்றுள்ளார்.

Recommended Video

    விடியல்கார அண்ணாச்சி.. பெட்ரோல் விலை என்னாச்சு.. அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் கோஷம்

    அதிமுக சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தேனி ஸ்டேட் பேங்க் எதிரே உள்ள நகர அதிமுக அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி‌.ரவீந்திரநாத் பங்கேற்றுள்ளார்.

    தமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா?தமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா?

    அதிமுக

    அதிமுக

    அவருடன் தேனியில் நகர, பேரூர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இதில், ஏரோட்டும் விவசாயி! ஏங்கித் தவிக்கும் விவசாயி ,வாடி நிற்கும் விவசாயி வாழ்க்கைக்கு வழி சொல் திமுக-வே

    பழிவாங்க

    பழிவாங்க

    மு.க.ஸ்டாலின் அண்ணாச்சி! மக்கள் நலனை மறந்து விட்டு பழிவாங்க புறப்பட்டது நியாயம் தானா?
    போடாதே! போடாதே! பொய் வழக்கு போடாதே!
    அஞ்சாத சிங்கங்கள் நாங்களென்போம், ஆயிரம் வழக்கை திமுக அரசு போட்டாலும்! அஞ்சாமல் அவற்றை சந்திப்போம்!

    பெட்ரோல் விலை

    பெட்ரோல் விலை

    விடியல் கார அண்ணாச்சி! பெட்ரோல் விலை எண்ணாச்சு!
    ஏறுதே! ஏறுதே! விஷம் போல விலை ஏறுதே! பாயுதே! சாயுதே! வாழ்க்கைத் தரம் சாயுதே! சொன்னதை செய் திமுகவே!
    நீட் தேர்வை ரத்து செய்! தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றாதே! உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுபட்டனர்.

    பாரத பிரதமர்

    பாரத பிரதமர்

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் இரண்டு தினங்களுக்கு முன்பாக டெல்லியில் பாரத பிரதமரை சந்தித்தபோது மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

    ரத்து

    ரத்து

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழகத்தில் மக்கள் நலனை காக்கும் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். ஆளும் திமுக அரசு மக்கள் நலனில் எந்தவித அக்கறையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழக எதிர்க்கட்சியான அதிமுக இன்று சாலையில் இறங்கி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

    English summary
    Theni MP O.P. Raveendranath says that DMK is not doing any projects for people's interests.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X