சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவிடம் 37 எம்.பிக்கள் உள்ளனர்.. என்ன செய்தார்கள்?.. கூட்டணிக்கு முன்பே குண்டை போட்ட பிரேமலதா!

அதிமுக 37 எம்எல்ஏக்கள் வைத்து இருந்தும் கூட தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

    சென்னை: அதிமுக 37 எம்எல்ஏக்கள் வைத்து இருந்தும் கூட தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் போலவே இவர் மிகவும் கோபமாக பேசினார். பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசினார்.

    திமுக மீது கடுமையான விமர்சனங்களை இவர் அடுக்கிக்கொண்டே சென்றார். அதேசமயம் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதிமுக மீதும் பிரேமலதா விமர்சனம் வைத்தார்.

    பாமகவுக்கு முதலில் சீட் கொடுத்ததால்தான் வம்பு.. தனித்து போட்டியிடவும் ரெடி.. பிரேமலதா பரபர பேட்டி பாமகவுக்கு முதலில் சீட் கொடுத்ததால்தான் வம்பு.. தனித்து போட்டியிடவும் ரெடி.. பிரேமலதா பரபர பேட்டி

    பிரேமலதா பேட்டி

    பிரேமலதா பேட்டி

    பிரேமலதா தனது பேட்டியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளில் வென்றார்கள். அதிமுக அப்படி வென்றதால் தமிழகத்திற்கு என்ன நன்மை நடந்தது. 37 அதிமுக எம்.பிக்கள் இருந்தும் தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வர முடிந்தது.

    கூட்டணி

    கூட்டணி

    தேமுதிக கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக ஆட்சியில் அமர முடிந்தது. தற்போது அதிமுக ஆட்சி தொடருவதற்கு தேமுதிகதான் காரணம். இன்றைக்கு அதிமுக ஆட்சியில் இருப்பதற்கு தேமுதிகதான் காரணம். நாங்கள் இல்லை என்றால் அவர்கள் ஆட்சியே அமைத்து இருக்க முடியாது.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    ஜெயலலிதாவை சட்டப்பேரவையிலேயே எதிர்த்தவர் விஜயகாந்த். துணிச்சலாக அப்போதே பேசியவர் அவர். மணப்பெண் இருந்தால் 10பேர் கேட்கத்தான் செய்வர்; தேர்தலும் அதுபோலதான். அதனால்தான் எங்களிடம் பேசுகிறார்கள். ஆக்கப்பொறுத்துவிட்டீர்கள், ஆறப்பொறுங்கள்.

    தேமுதிக கூட்டணி

    தேமுதிக கூட்டணி

    மக்களவை தேர்தலுக்கான தேமுதிக கூட்டணி பேச்சு-வார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை, குழப்பமுமில்லை. தேமுதிக கொள்கையில் உறுதியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து ஆக வேண்டும். விரைவில் அறிவிப்போம் என்று, பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    AIADMK MPs didn't do anything to Tamil Nadu says DMDK Premalatha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X