சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினுக்கு "ஒர்க் அவுட்" ஆகுதோ.. பெரும்பான்மை கிடைக்குமாம்.. அழுத்தமாக டிக் அடித்த வாசகர்கள்!

எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: "தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும்னு நீங்க நினைக்கறீங்க"ன்னு ஒரு கேள்வியை நம் வாசர்களிடம் கேட்டோம்.. திரண்டு வந்து திமுகதான் என்று அழுத்தமாக கருத்து கணிப்பில் வாக்களித்து விட்டு போய்விட்டனர்!

சட்டசபை தேர்தலுக்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிய ஆரம்பித்துவிட்டன.. ஒருபடி மேலே போய் கூட்டணி சம்பந்தமான பேச்சுகூட பலமாக அடிபட ஆரம்பித்துவிட்டன.

உள்ளடி வேலைகள், வியூகங்கள், கட்சியை பலப்படுத்துவது, மக்களை கவரும் யோசனைகள் என கட்சிகளுக்குள் சத்தமில்லாமல் வேலை நடந்துவந்தபோதுதான், நேத்து விபி துரைசாமி தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி பிள்ளையார் சுழியை போட்டு வைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவுவிநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு

திமுக

திமுக

"அதிமுக மற்றும் திமுக இடையே இனிமேல் போட்டி கிடையாது.. பாஜக vs திமுக என்றுதான் போட்டி" என்று எந்த அடிப்படையில் சொன்னாரோ தெரியவில்லை.. ஆனால் தேர்தல், கூட்டணி சமாச்சாரம் சூடுபிடித்துவிட்டது.. இந்த சூட்டோடு சூடாக நாமும் நம் வாசகர்களிடம் "தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும்னு நீங்க நினைக்கறீங்க" என்று ஒரு கேள்வியை கேட்டோம்.

 வாக்களித்துள்ளனர்

வாக்களித்துள்ளனர்

"யாருக்கும் கிடையாது" என்ற ஆப்ஷனுக்கு 8.4சதவீதம் பேரும் "அதிமுக" என்ற ஆப்ஷனுக்கு 13.36 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "திமுக"வுக்கு 61.45 சதவீதமும், "கூட்டணியை பொறுத்தது" என்பதற்கு 11.83 சதவீதமும் ஓட்டுக்கள் விழுந்துள்ளது.. "பொறுத்திருந்து பார்ப்போம்" என்ற ஆப்ஷனுக்கு 4.96 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

 விவசாயிகள் பிரச்சனை

விவசாயிகள் பிரச்சனை

இதில் முக்கியமாக திமுக, அதிமுகவின் ஓட்டு விகிதத்தைதான்.. 4 மாசத்துக்கு முன்பு வரை அதிமுகவின் மவுசு வேற லெவலில் இருந்தது.. விவசாயிகள் பிரச்சனை முதல் டெல்லி விவகாரங்கள் வரை எடப்பாடியார் கெத்து காட்டி வந்தார்.. கொரோனா ரணகளத்திலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்களுடன் நெருங்கியே இருந்தார்.. இவரது திடீர் சுற்றுப்பயணங்களும், அதிரடிகளும்கூட முதல்வருக்கு பிளஸ் ஆகவே அமைந்தது.

 புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

ஆனால், எவ்வளவுதான் மல்லுக்கட்டி போராடி, மக்கள் நலனில் அக்கறை செலுத்தினாலும் கொரோனா விஷயத்தில் சற்று கோட்டை விட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.. இவர் ஒரு புள்ளிவிவரம் சொன்னால், விஜயபாஸ்கர் ஒன்று சொல்கிறார்.. இந்த 2 பேருக்கு நடுவில் புகுந்து உதயகுமாரும், செல்லூர் ராஜுவும் வேறு ஒரு புள்ளிவிவரத்தை சொல்கிறார்கள்.

 கோயம்பேடு

கோயம்பேடு

இதுபோக சரியாக திட்டமிடல், தடாலடி அறிவிப்புகள், கோயம்பேடு விவகாரம், லாக்டவுனை முறைப்படுத்தப்படாமை இப்படி கடந்த 3 மாசத்தில் அதிமுக இடியாப்ப சிக்கலில் தானாகவே போய் சிக்கி கொண்டுவிட்டது. இது ஒன்றைமட்டும் அதிமுக சரிசெய்து கொண்டாலே போதும்.. எடப்பாடியாரை யாராலும் ஒன்றும் அசைக்க முடியாது.. அதிமுக இழந்த அதன் தனித்துவத்தை மீண்டும் பெற்றுவிடும் என்பது நிச்சயம்.

அறிக்கை

அறிக்கை

அதேபோல திமுகவை எடுத்து கொண்டால், "எப்ப பார்த்தாலும் ஸ்டாலின் அறிக்கைதான் விடுவாரா? அதிரடிகளை காணோமே, வீட்டுக்குள்ள உட்கார்ந்து வீடியோ கான்பரன்ஸ் நடத்திட்டு இருக்காரே" என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் தூற்றியபடியே வந்தன.. ஆனாலும், இதே கொரோனா விவகாரத்தை சாதகமாகவும், உபயோகமாகவும் பயன்படுத்தி கொண்டது திமுக.

உடன்பிறப்புகள்

உடன்பிறப்புகள்

"தலைவரின் புது விக் ஒர்க் அவுட் ஆகிறது" என்று உடன்பிறப்புகள் பெருமையுடன் சொல்லி கொண்டாலும், "ஒருங்கிணைவோம் வா" என்பது போன்ற திட்டங்கள் உண்மையிலேயே சாமான்ய மக்களையும் சென்றடைந்தது.. ஸ்டாலின் என்ன டாக்டரா என்று கேட்டாலும், ஸ்டாலினுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது என்று சொன்னாலும்கூட, சற்றும் தளராமல், சோர்ந்துவிடாமல் திமுக தலைமை தன் பயணத்தில் உறுதியாக சென்று கொண்டுள்ளது.. அதனால்கூட திமுகவுக்கு இந்த 61.45 சதவீதம் பேர் வாக்களித்திருக்கலாம்.

 கணிப்புதான்

கணிப்புதான்

தீவிரமாக மேற்கொண்டு வரும் செயல்பாடுகள்தான், திமுகவா? அதிமுகவா? என்று பெரும்பாலானோர் எடை போட்டு சீர்தூக்கி பார்க்க வழக்கமான காரணமாக அமைந்துவிடுகிறது.... தற்போதும் மக்கள் அப்படித்தான் இரு தரப்பையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இது ஒரு கணிப்புதான்.. ஒரு மாதிரி வடிவ வாக்கு சதவீதம்தான்.. இப்போதைக்குதான் இந்த நிலைமையே தவிர, இது நிச்சயம் மாறும்.

 வரலாறு

வரலாறு

எந்த கட்சி மக்களிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொள்கிறதோ, எந்த கட்சி மக்களிடம் நெருங்கி, அவர்களின் உணர்வுகளை உள்வாங்கி கொண்டு செயல்படுகிறதோ.. அந்த கட்சிதான் என்றுமே தமிழகத்தில் ஆட்சியை பிடித்து வந்திருக்கிறது என்பதே கடந்த கால அரசியல் வரலாறு!

English summary
AIADMK OR DMK, Which party is going to get majority in the assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X