சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு இடத்தில் கூட ஜெயிக்கலை.. ஆனாலும் அமைச்சர் பதவி வேணுமாம்.. இவங்களுக்கு இதெல்லாம் தேவையா?

மத்திய அமைச்சரவையில் இடம்பெற அதிமுக, பாமக, தேமுதிக முயற்சி செய்து வருகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்கப்படுமா, இல்லையா?

    சென்னை: ஏன்தான் இவங்களோட கூட்டணி வெச்சோம் அப்படிங்கிற மனோபாவமும், மனநிலையும், குழப்பமும்தான் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மட்டுமில்லை, வந்து சேர்ந்த பாமக, தேமுதிகவுக்கும் ஏற்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது யாருமே எதிர்பாராத ஒன்று. ஜெயலலிதாவின் அடிப்படை கொள்கையை மீறி, பாஜகவுடன் கூட்டு வைத்தது அதிமுக. இத்தனைக்கும் அந்த சமயத்தில் தமிழக மக்கள் மத்திய அரசு மீது கடுமையான அதிருப்தி, ஆத்திரத்தில் இருப்பது தெரிந்தும், அதிமுக பாஜகவிடம் பணிந்தது.

    இதையாவது ஒருவிதத்தில் சேர்த்து கொள்ளலாம், பாமகவை எதிலுமே சேர்க்க முடியாது. சகட்டுமேனிக்கு பேசிக் கொண்டிருந்த ராமதாஸ், தடாலடியாக கூட்டணி வைத்து, தைலாபுர தோட்ட விருந்து வரைக்கும் போய்விட்டார். ஆனால் எல்லாவற்றிலும் மண்ணையே கவ்வியது பாமக.

    சுத்தம்.. மத்திய அமைச்சர் பதவி அதிமுகவுக்கு கிடையாது போலயே! சுத்தம்.. மத்திய அமைச்சர் பதவி அதிமுகவுக்கு கிடையாது போலயே!

    மானத்தை வாங்கியது

    மானத்தை வாங்கியது

    அடுத்ததாக, தேமுதிக! சீட்டுக்காக, இல்லாத கெத்தெல்லாம் காட்டியது... முரண்டு பிடித்தது.. வாதம் செய்தது.. அதிமுகவின் மானத்தை வாங்கியது.. பாஜகவை பொறுப்பாளரை தன் வீட்டுக்கே வரவழைத்தது.. போட்டி, பொறாமையை காட்டி பேரம் பேசியது.. இவ்வளவும் செய்து கடைசியில் ஒன்னுமே இல்லாமல் போய்விட்டது!

    தொண்டர்கள்

    தொண்டர்கள்

    இப்படி ஆளாளுக்கு, மக்களையும், தொண்டர்களையும் பற்றி நினைக்காமல், சுயலாபத்துக்காக அன்று பாஜகவிடம் கூட்டணி வைத்தனர். அதன் பலனையும் அறுவடை செய்து வருகிறார்கள். இப்போது தாங்கள் தோல்வியுற யார் காரணமோ, அவர்களிடமே சென்று அமைச்சர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார்கள்.

    அன்புமணி

    அன்புமணி

    பாமகவுக்கு 7+1 என்று சொல்லும்போதே, +1 அன்புமணிதான் என்று தெரிந்துவிட்டது. இப்படி ராஜ்ய சபா எம்பியாக அதிக வாய்ப்பு அவருக்கு இருந்தாலும், அக்கட்சி பாஜக தலைமையிடம் மத்திய அமைச்சரவையில் இடம் பெற விருப்பம் தெரிவித்து ஆலோசனை செய்து வருகிறதாம்.

    சர்ச்சைகள்

    சர்ச்சைகள்

    இன்னொரு பக்கம், வாரணாசி வரை மகனை அழைத்து சென்றவர், எப்படியாவது மத்திய அமைச்சர் சீட் வாங்கி தந்துவிட வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளார். இதற்காக கட்சியில் சலசலப்புகள், சர்ச்சைகள் எழுவதை பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை.

    இடம் பெறுமா?

    இடம் பெறுமா?

    அதேபோல, தேமுதிக சார்பிலும் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, தேமுதிகவை பாஜக தலைமைக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அது விஜயகாந்த் மீதுள்ள பாசமா, அல்லது பிரேமலதா, சுதீஷ்-ன் அணுகுமுறையா என தெரியவில்லை. ஆனால் இவ்வளவு காலத்தில் பாஜக தலைமையிடம் சுதீஷ் நல்ல இணக்கமான போக்கையே கொண்டிருக்கிறார். இதனால் மாநில அளவில் கட்சி தோற்றாலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருக்குமா என முயன்று வருகிறார்.

    நன்றிகடன்

    நன்றிகடன்

    ஆக... கூட்டணி வைத்தது அதிமுகவிடம் என்றாலும், தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக ஆளாளுக்கு தனித்தனியாக மத்திய அமைச்சர் பதவியை குறி வைத்து பாஜகவிடம் காய் நகர்த்தி வருகிறார்கள். அதிமுக, தேமுதிக, பாமக, தமாகா என தன்னை நம்பி அன்று கூட்டணி வைத்தவர்களுக்கு பாஜக என்னதான் செய்ய போகிறது? நன்றி கடனாக யாருக்கு என்ன பொறுப்பை தர போகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை பதவி தராவிட்டால், அப்போதாவது கூட்டணி தலைவர்கள் தங்கள் போக்கை மாற்றி கொள்வார்களா? தொண்டர்களை பற்றி சிந்திப்பார்களா? என பார்ப்போம்

    English summary
    The AIADMK, DMDK, PMK parties are undertaking a serious effort to get a seat in the Union Cabinet. This evening it will be known who is the minister of Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X