சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News: சுபமாக முடிந்த அதிமுக - பாஜக கூட்டணி.. டெல்லி கிளம்பினார் கோயல்

Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலுக்காக, அதிமுக மற்றும் பாமக நடுவே கூட்டணி உறுதியாகியுள்ளது. பாமகவிற்கு அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் இந்த உடன்படிக்கை உருவாக்கத்தில் இன்று பங்கேற்றனர். பாமக சார்பில், அதன் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார்.

Newest First Oldest First
7:46 PM, 19 Feb

தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து கவலைப்படாதீர்- கோயல் வலியுறுத்தல்

மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க ஒத்துழைப்பு மட்டும் தாருங்கள் என விஜயகாந்திடம் கோயல் வலியுறுத்தல்

7:40 PM, 19 Feb

கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து கொண்டு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் கோயல்
6:48 PM, 19 Feb

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்தேன் - கோயல்

பிரதமர் மோடி விஜயகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் - கோயல்

6:45 PM, 19 Feb

பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் - தேமுதிக சுதீஷ் செய்தியாளர்கள் சந்திப்பு
6:33 PM, 19 Feb

பாஜகவினர் கூட்டணி பேச வரவில்லை- தேமுதிக

மரியாதை நிமித்தமாகவும் உடல் நிலை குறித்து விசாரிக்க மட்டுமே வந்தனர்- தேமுதிக விளக்கம்

6:32 PM, 19 Feb

லோக்சபா தேர்தலில் பாஜகவின் 5 தொகுதிகள் எவை?

திருச்சியில் தமிழிசை சவுந்திர ராஜனும், நெல்லையில் நயினார் நாகேந்திரனும் போட்டியிட வாய்ப்பு

கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களமிறங்க வாய்ப்பு

திருப்பூரில் வானதி சீனிவாசன், கோவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டி என தகவல்

6:22 PM, 19 Feb

பாஜக கூட்டணியில் 9 தொகுதிகளை கேட்கிறது தேமுதிக

இன்றே தேமுதிக-பாஜக கூட்டணி உறுதியாக வாய்ப்பு இல்லை

அதிமுக நிர்வாகிகள் யாரும் விஜயகாந்த் வீட்டுக்கு வரவில்லை

விஜயகாந்த் உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு பாஜக தலைவர்கள் கிளம்ப வாய்ப்பு

6:10 PM, 19 Feb

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
6:09 PM, 19 Feb

அதிமுக தரப்பில் யாரும் விஜயகாந்த் இல்லம் செல்லவில்லை
6:06 PM, 19 Feb

கூட்டணி பற்றி பேச விஜயகாந்த் இல்லம் வந்தார் பியூஷ் கோயல்
5:44 PM, 19 Feb

ஜெயலலிதாவின் கொள்கைக்கு முரண்பாடான கூட்டணி இது - கருணாஸ் எதிர்ப்பு

அதிமுக பாஜக பாமக கூட்டணி படு தோல்வி அடையும்- கருணாஸ் ஆவேசம்

நான், தமிமுன் அன்சாரி, தனியரசு இந்தக் கூட்டணியை ஏற்க மாட்டோம் - கருணாஸ்

மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி வரக் கூடாது - கருணாஸ்

தமிழகத்தை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார் மோடி - கருணாஸ்

5:42 PM, 19 Feb

40 தொகுதிகளிலும் தோற்க போகிற கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் கருத்து

கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி கிணற்றில் இறங்கியுள்ளார் - டிடிவி

5:19 PM, 19 Feb

அதிமுக கூட்டணிக்கு முதல் ஷாக்.. பிறந்த வேகத்தில் உடைகிறது

பாஜக இடம் பெறும் கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம் பெறாது - தமிமுன் அன்சாரி

5:03 PM, 19 Feb

தேமுதிகவுடன் பேச்சு நடத்த கிளம்பினார் பியூஷ் கோயல்

விஜயகாந்த்தின் விருகம்பாக்கம் வீட்டில் வைத்து பேசவுள்ளார் கோயல்

இன்றைக்குள் பாஜக - அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படவுள்ளது

5:03 PM, 19 Feb

தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன

பாமக, பாஜகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன

அதிமுக வசம் தற்போது 28 தொகுதிகள் மிச்சம் உள்ளன

5:02 PM, 19 Feb

அதிமுக-பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு

துணை முதல்வர் ஓ.பி.எஸ். பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு என அறிவித்தார்

4:56 PM, 19 Feb

பாஜகவுக்கு வெறும் 5 தொகுதிகளே ஒதுக்கப்பட்டதால் பாஜகவினர் பெரும் அதிர்ச்சி
4:56 PM, 19 Feb

முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள்

லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் - ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக, பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் எட்டப்பட்டது - ஓ.பன்னீர்செல்வம்

பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்

4:55 PM, 19 Feb

அதிமுக - பாஜக தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உருவானது - ஓ பன்னீர் செல்வம் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு - ஓ பன்னீர் செல்வம்

4:34 PM, 19 Feb

தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக-அதிமுக பேச்சுவார்த்தை நிறைவு
4:20 PM, 19 Feb

காங்கிரஸ்-திமுக பேச்சுவார்த்தை நிறைவடைந்தது- திருநாவுக்கரசர் பேட்டி

தொகுதி பங்கீடு குறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகும்

3:50 PM, 19 Feb

அதிமுக வேகத்தை பார்த்து மிரண்ட காங்கிரஸ்

கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

3:29 PM, 19 Feb

அதிமுகவின் கூட்டணி திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது - திருமாவளவன்

அதிமுக - பாமக கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

ஏற்கனவே அதிமுக-பாமக கூட்டணி தோல்வியை சந்தித்தது - திருமாவளவன்

ஜெயலலிதாவின் முடிவுகளுக்கு எதிராகத்தான் அதிமுக தற்போது செயல்படுகிறது - திருமாவளவன்

பாமகவுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர் - திருமாவளவன்

2:53 PM, 19 Feb

பாஜகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்

பாமகவுக்கு 7+1 சீட் கொடுத்து இன்று காலை ஒப்பந்தம் போட்டது அதிமுக

பாஜக தரப்பு 8 சீட் கேட்டு வருவதால் பேச்சுவார்த்தையில் இழுபறி

தீவிர பேச்சுக்குப் பின்னர் பாஜகவுக்கு அதிமுக 7 சீட் ஒதுக்கியுள்ளதாக புதிய தகவல்

2:25 PM, 19 Feb

அதிமுக - பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறுகிறது

பியூஷ் கோயலுடன் பேச முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக பாஜக தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படவுள்ளது

2:11 PM, 19 Feb

கொள்கை அடிப்படையில் கூட்டணி இல்லை- தம்பிதுரை

எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி- கரூரில் தம்பிதுரை பேச்சு

மக்களவை தேர்தலில் பாமகவுடன் அதிமுக கூட்டணி குறித்து தம்பிதுரை கருத்து

திமுக காங்கிரஸ் கொள்கையற்ற கூட்டணி- தம்பிதுரை

2:11 PM, 19 Feb

அதிமுகவுடன் பியூஷ் கோயல் 2வது கட்டப் பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடு தொடர்பாக கோயலுடன் அமைச்சர்கள் பேச்சு

அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கோயலுடன் முக்கிய ஆலோசனை

1:44 PM, 19 Feb

பாஜக - அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்தது வரலாற்றுப் பிழை - கே.எஸ். அழகிரி
1:44 PM, 19 Feb

திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

1:31 PM, 19 Feb

பணத்தைப் பற்றி மட்டுமே டாக்டர் ராமதாஸுக்கு கவலை - மு.க.ஸ்டாலின்

மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர் ராமதாஸ் - மு.க.ஸ்டாலின்

READ MORE

AIADMK and PMK make an alliance - Live updates

English summary
AIADMK and PMK make an alliance, ahead of Lok Sabha election in Chennai. Here you can catch live actions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X