சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உளவுத்துறை ரிப்போர்ட்.. இதை மட்டும் பண்ணா போதும்.. அதிமுகவை அசைக்க கூட முடியாது.. ஆனால்!?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது... அதிலும் ஆளும் கட்சியான அதிமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்க போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

தமிழகத்தில் எப்போதும் தேர்தல் அறிக்கைகள்தான் தேர்தல் முடிவுகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் தேசிய அளவில் ஒவ்வொரு தேர்தலிலும் கவனம் ஈர்க்கும்.

தேர்தல் அறிக்கை டிரெண்டை இந்திய அரசியல் உலகில் கொண்டு வந்ததே தமிழகம்தான் என்றும் சொல்லலாம். இப்படிபட்ட நிலையில் வர இருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மிகப்பெரிய தேர்தல் அறிக்கை ஒன்றை தயார் செய்து வருகிறது.

அறிக்கை

அறிக்கை

இந்த தேர்தல் அறிக்கை அதிமுக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பாக தயாரிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள். ஆளும் கட்சி என்பதால் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் மக்களின் கோரிக்கைகளை மனதில் வைத்து அறிக்கையை தயார் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் இதற்காக சல்லடை போட்டு மக்களின் கருத்துக்களை கேட்டுள்ளனர்.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

அதிமுக நிர்வாகிகள் கொடுத்த ரிப்போர்ட், உளவுத்துறை கொடுத்த அறிக்கை என்று பல விஷயங்களை மையமாக வைத்து தேர்தல் அறிக்கையை தயார் செய்து உள்ளனர். ஏற்கனவே விவசாய கடன் தள்ளுபடி , நகைக்கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு என்று அதிமுக வெளியிட்ட அறிவிப்புகள் எல்லாம் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வரவேற்பு

வரவேற்பு

முக்கியமாக முதல்வர் பழனிசாமியின் இமேஜை புதிய உச்சத்திற்கு இந்த அறிவிப்புகளை கொண்டு சென்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி தனியார் துறை வேளைகளில் தமிழக இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் திட்டத்தை அதிமுக கொண்டு வரலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.

கொண்டு வருமா?

கொண்டு வருமா?

தனியார் துறை வேலைகளில் சொந்த மாநில மக்களுக்கு ஆந்திர பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களிலும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. வேலைவாய்ப்பு பிரச்சனை நிலவி வரும் நிலையில் உள்ளூர் மக்களிடையே இது போன்ற அறிவிப்புகள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்திலும் இதேபோன்ற அறிக்கையை அதிமுக வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் இடஒதுக்கீடு சதவிகிதம் எவ்வளவாக இருக்கும் என்பது இன்னும் சந்தேகமாக உள்ளது. இது போன்ற சட்டங்கள் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சட்ட சிக்கலை சந்தித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் இதை எப்படி கொண்டு வருவது என்று ஆலோசனைகள் செய்யப்படுகிறது.

ஆலோசனைகள்

ஆலோசனைகள்

தமிழகத்திலும் இந்த திட்டத்தை கொண்டு சாத்தியமா என்ற கேள்விகள் ஒரு பக்கம் உள்ளது. ஆனால் சொந்த மாநில மக்களுக்கு தனியார் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்று சொன்னால் அது அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆதரவாக அமையும் என்பது மட்டும் உறுதி. இது தொடர்பான சாதக பாதகங்களை ஆராய்ந்து வருவதால் அதிமுக விரைவில் இதில் முக்கிய முடிவு எடுக்கலாம் என்கிறார்கள்.

English summary
AIADMK poll promises on employment will be a game-changer in the Tamilnadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X